குறைந்த விலையில் லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்

செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்திய நிறுவனமான லாவா புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. `ஐரிஸ் பியூயல் 60’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. பேட்டரியின் மின்சக்தி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.                                           Lava Iris Fuel 60
5 அங்குல திரை, 1.3 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி உள்ளடங்கிய நினைவக வசதி இதை 32 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியோடு இது வெளிவந்துள்ளது.

இதில் 4,000 எம்ஏஹெச் பேட்டரி யுடன், ஆண்ட்ராய்ட் கிட்கேட் இயங்குதளத்தைக் கொண்டதாக இது உள்ளது. ஆண்ட்ராய்ட் லாலிபாப் இயங்குதளத்துக்கு மாறும் வசதியும் உள்ளது. 10 மெகாபிக்செல் கேமரா மற்றும் 2 மெகா பிக்செல் முன்புற கேமரா வுடன் இது வெளிவந்துள்ளது. 32 மணி நேரம் வரை தொடர்ந்து செயலாற்றும் திறன் கொண்டதாக இதில் உள்ள பேட்டரி உள்ளது. 3 மணி நேரத்தில் முழுவதுமாக இது சார்ஜ் ஆகிவிடும். இதன் விலை ரூ. 8,888 ஆகும். லாவா தயாரிப்புகள் விற்பனை யில் 6 சதவீத இடத்தைப் பிடித்துள்ளன.
குறைந்த விலையில் லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம் குறைந்த விலையில் லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம் Reviewed by ANBUTHIL on 7:43 AM Rating: 5
Powered by Blogger.