பாடல்களை கட் செய்ய அருமையான மென்பொருள்

செல்போனில் அனைவருக்கும் புதுப்புது பாடல்களை அழைப்பு ஒலியாக வைக்க விரும்புவோம். இதற்காக பாடல்களை இணையத்தில் தேடிப்பிடித்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம். எல்லா பாடல்களும் கிடைத்து விடாது ஒரு சில பாடல்கள் முழுபாடல்களாக மட்டுமே கிடைக்கும், அதுபோன்ற பாடல்களை தனியே கட் செய்து நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் ஏதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். பாடல்களை கட் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைகிறன, அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் MP3 Cutter.

                                     MP3 Cutter

மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த MP3 Cutter மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் எந்த பாடலை கட் செய்ய வேண்டுமோ அதை File வழியாக சென்று ஒப்பன் செய்யவும். பின் உங்களுடைய பாடலானது அப்லோட் செய்யப்பட்டு மென்பொருளில் ஒப்பன் ஆகும்.

                                MP3 Cutter Screenshot
பின் வேண்டிய பகுதியை தேர்வு செய்து கட் செய்து கொள்ளவும். பின் நீங்கள் கட் செய்த பாடலை சேமித்து கொள்ளவும். அவ்வளவு தான் இனி நீங்கள் விரும்பிய பாடலில் எந்த பகுதியை வேண்டுமானலும் அழைப்பு ஒலியாக மட்டுமல்ல நீங்கள் விரும்பும் பாடலாகவும் வைத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் பாடல்களை கட் செய்ய அருமையான மென்பொருள் ஆகும்.
பாடல்களை கட் செய்ய அருமையான மென்பொருள் பாடல்களை கட் செய்ய அருமையான மென்பொருள் Reviewed by ANBUTHIL on 12:00 PM Rating: 5
Powered by Blogger.