குரோம் உலவியில் செஸ் விளையாட்டு

கணினியில் அனைத்து விளையாட்டுளையும் இலவசமாக இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி பயன்படுத்துவோம். அதுபோல செஸ் விளையாட்டும் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால் நாம் இதனை அப்ளிகேஷனாக பயன்படுத்தபோவது இல்லை. குரோம் உலவியின் துணையுடன் இந்த விளையாட்டை விளையாட போகிறோம். செஸ் விளையாட்டில் அனைவரும் விஸ்வனாதன் ஆனந்தனாக இருக்கவே ஆசைப்படுவோம். ஏனெனில் செஸ் விளையாட்டில் கொடிகட்டி பறக்க கூடியவர் அவரே. அவருக்கு நிகரானவர் யாரும் இல்லை என்றுதான் கூறமுடியும். வீட்டில் போரடிக்கும் போது அனைவரும் விளையாட நினைப்பது செஸ், கேரம் ஆகும். இதில் புகழ்பெற்ற விளையாட்டு செஸ் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டை நாம் குரோம் உலவியில் இணைத்து விளையாட முடியும்.

செஸ் விளையாட்டிற்கான சுட்டி

                                          
இந்த விளையாட்டை குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை குரோம் உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் குரோம் உலவியை ஒப்பன் செய்து தோன்றும் விண்டோவில் Spark Chess என்னும் ஐகானை அழுத்தி விளையாட்டை ஒப்பன் செய்யவும்.

பின் விளையாட்டை விளையாட துவங்கவும். நீங்கள் இதில் நான்கு பேருடன் விளையாட முடியும். கணினியும் நீங்களும் விளையாடும் விளையாட்டு ஆகும். செஸ் விளையாட்டில் நான் ஒன்றும் புலி கிடையாது. எலி என்று வேணுமானால் சொல்லிக்கொள்ள முடியும். விளையாட்டை விளையாட்டாக விளையாடி பாருங்கள். இதனை நீங்கள் குரோம் உலவியில் பதிந்து பயன்படுத்த முடியும்.
குரோம் உலவியில் செஸ் விளையாட்டு குரோம் உலவியில் செஸ் விளையாட்டு Reviewed by ANBUTHIL on 11:00 AM Rating: 5
Powered by Blogger.