ஆடியோக்களை பிரிக்க மற்றும் சேர்க்க

பெரும்பாலானோர் ஒரு பாடலை விரும்பி கேட்போம் ஆனால் பாடல் முழுவதையும் கேட்க மாட்டோம், ஒரு குறிப்பிட்ட ஒருசில வரிகளை மட்டுமே கேட்போம். பிடித்திருந்தால் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து கேட்போம். செல்போனில் ரிங்டோன் அமைக்க வேண்டுமெனில் ஒருபாடலுடைய குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அமைத்துக்கொள்வோம். 

இவ்வாறு ஒரு பாடலில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்தெடுக்க வேண்டுமெனில் நாம் ஒரு ஆடியோ கட்டரின் உதவியை மட்டுமே நாட வேண்டும். அந்த வகையில் உள்ள மென்பொருள் தான் Weeny Free Audio Cutter இந்த மென்பொருள் மூலமாக எளிமையான முறையில் ஆடியோவினை பிரித்துக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளின் உதவியுடன் ஆடியோ பைல்களை ஒன்றினைக்கவும் முடியும். 

                                 Free Audio Cutter Screenshot
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் Cut Audio, Merge Audio என்ற தேர்வினை உங்கள் விருப்பபடி தேர்வு செய்து கொள்ளவும். பின் ஆடியோ பைலை உள்ளிட்டு வேண்டியபடி உருவாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். ஆடியோ பைல்களை ஒன்றினைக்கும் போது பல்வேறு அளவுடைய பைல்களை இந்த மென்பொருள் ஆதரிக்கும்.
                              http://www.weenysoft.com/free-audio-cutter.html
ஆடியோக்களை பிரிக்க மற்றும் சேர்க்க ஆடியோக்களை பிரிக்க மற்றும் சேர்க்க Reviewed by அன்பை தேடி அன்பு on 11:30 AM Rating: 5
Powered by Blogger.