முடக்கப்பட்ட YOUTUBE வீடியோவை காண

YOUTUBE தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும். இந்த YOUTUBE தளமானது கூகுள் நிறுவனத்துடையது ஆகும். இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும், அதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களை கவர்ந்தவையாக இருக்க கூடும்.

 அந்த நிலையில் அதுபோன்ற குறிப்பிட்ட வீடியோவினை காண வேண்டுமெனில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் தற்போது யூட்டுப் தளத்தில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினை காண நெருப்புநரி உளாவியில் ஒரு நீட்சி உள்ளது. அதன் மூலம் முடக்கப்பட்ட வீடியோக்களை காண முடியும்.

நீட்சியினை தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று நீட்சியினை நெருப்புநரி உளவியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை நெருப்புநரி உளவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த குறிப்பிட்ட யூட்டுப் வீடியோவினை காணும் போது “ProxTube is unblocking this video” என்ற எச்சரிக்கை செய்தி தோன்றும். 


                                   யூட்டுப் தளத்தில் முடக்கப்பட்ட வீடியோக்களை காண இந்த Proxtube நீட்சி உதவுகிறது. ஜெர்மனி, நெதர்லாந்த் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் யூட்டுப் வீடியோ முடக்கப்பட்டு இருக்கும். அந்த நாடுகளில் உள்ள வீடியோக்களை காண இந்த நீட்சி பெரிதும் உதவும்.
முடக்கப்பட்ட YOUTUBE வீடியோவை காண முடக்கப்பட்ட YOUTUBE வீடியோவை காண Reviewed by ANBUTHIL on 10:30 AM Rating: 5
Powered by Blogger.