டெஸ்க்டாப் ஐகான்களை வரிசைப்படுத்த

கணினியில் தினமும் பல்வேறு விதமான கோப்புகளை கையாளுவோம். பெரும்பான்மையானோர் பல முக்கியமான கோப்புகளை டெக்ஸ்டாப்பிலேயே வைத்து விடுவார்கள், பல்வேறு விதமான கோப்பு அடைவு கொண்ட பைல்கள் டெஸ்க்டாப்பிலேயே வைத்திருப்போம் இது கணினியின் அழகினை பாதிக்கும். மேலும் ஒரு சில நேரங்களில் சில முக்கியமான கோப்புகளை டெக்ஸ்டாப்பிலிருந்து நீக்கி விடுவோம். இதற்கு பதிலாக டெஸ்க்டாப் ஐகான்களை குறிப்பிட்ட தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்துக்கொள்ள முடியும்.


இந்த தனித்தனி பகுதிகளாக பிரிப்பதனால் வேர்ட், பிடிஎப், உலாவி, படங்கள் என தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்துக்கொள்ள முடியும். இதற்கு FENCES என்னும் மென்பொருள் வழிவகை செய்கிறது.


மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு ஒகே செய்யவும். பதிவிறக்க சுட்டியானது மின்னஞ்சலுக்கு வரும் அதை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். 


பின் டெஸ்க்டாப்பில் வெற்றிடத்தில் சுட்டியால் ட்ராக் செய்து இழுக்கவும். அப்போது தோன்றும் துணை விண்டோவில் Create Fence Here, Create Folder Portal Here என்று இருக்கும். இதனை தெரிவு செய்து உருவாக்கி கொள்ள முடியும்.                                          முதலில் ஒரு கோப்பறையினை உருவாக்கி அதில் குறிப்பிட்ட ஐகான்கள் அனைதையும் இட்டுவிடவும். பின் Create Folder Portal here என்பதை தெரிவு செய்து குறிப்பிட்ட கோப்பறையினை தெரிவு செய்யவும். அப்போது டெஸ்க்டாப்பில் தனியாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.                                                   இதை வேண்டுமெனில் நீக்கி கொள்ளவும் முடியும்.
டெஸ்க்டாப் ஐகான்களை வரிசைப்படுத்த டெஸ்க்டாப் ஐகான்களை வரிசைப்படுத்த Reviewed by ANBUTHIL on 6:52 PM Rating: 5
Powered by Blogger.