அசத்தலான அம்சங்களுடன் ஸ்பைஸ் ஸ்மார்ட்போன் விலை ரூபாய் 4,399

இந்தியாவில் ஆன்டிராய்டு கிட்காட் மூலம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ஸ்பைஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஸ்பைஸ் எம்ஐ-430 ஸ்மார்ட்போன் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது.இதன் விலை ரூபாய் 4,399 என நிர்னயக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

                               
                                                 

இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை ஸ்பைஸ் எம்ஐ-430 ஸ்மார்ட்போன் 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே 480*800 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 256 எம்பி ராம் கொண்டுள்ளது.

மெமரியை பொருத்தவரை 2 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு டூயல் சிம் வசதியும் உள்ளது.

கமெராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 2 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 1.3 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இதோடு ஜிபிஆர்எஸ்/எட்ஜ், வைபை, ப்ளூடூத் மற்றும் 3ஜி வசதிகளோடு 1400 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

இந்நிறுவனம் சமீபத்தில் ஸ்டெல்லார் 517 மற்றும் ஸ்டெல்லார் 470 ஸ்மார்ட்போன்களை ரூ.7,999 க்கு வெளியிட்டதோடு இரண்டும் டூயல்சிம் மற்ரும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அசத்தலான அம்சங்களுடன் ஸ்பைஸ் ஸ்மார்ட்போன் விலை ரூபாய் 4,399 அசத்தலான அம்சங்களுடன் ஸ்பைஸ் ஸ்மார்ட்போன் விலை ரூபாய் 4,399 Reviewed by ANBUTHIL on 3:50 PM Rating: 5
Powered by Blogger.