dailymotion
Dailymotion வீடியோக்களை தரவிறக்கம் செய்ய Firefox நீட்சி
ஏதாவது ஒரு வீடியோ கோப்பு வேண்டுமெனில் நாம் முதலில் நாடுவது யூடுப் தளம் ஆகும். மேலும் ஒரு சில வீடியோக்கள் இந்த தளத்தில் கூட கிடைக்காது அதுபோன்ற வீடியோக்களும் மற்ற வீடியோ தளங்களில் கிடைக்கும் இதில் புகழ்பெற்ற தளம்தான் Dailymotion ஆகும். இந்த தளத்தில் தினமும் என்னற்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறன.
அன்றாடம் ஒளிபரப்பபடும் சின்னத்திரைகளின் உயிர்நாடியான சீரியல்களும் தினமும் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறன. இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்றால் அவ்வளவு எளிதான செயல் இல்லை. இந்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய நெருப்புநரி நீட்சி ஒன்று உதவி செய்கிறது.
நீட்சிக்கான சுட்டி
முதலில் நெருப்புநரி உலாவியினை திறந்து கொள்ளவும் பின் சுட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள நீட்சியினை நெருப்புநரி உலாவியில் இணைத்துக்கொள்ளவும்.
பின் நெருப்புநரி உலாவியினை மறுதொடக்கம் செய்துகொண்டு, Dailymotion தளத்தில் உள்நுழையவும்.
பின் வீடியோக்களின் கீழ் தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி இருக்கும் அதை பயன்படுத்தி வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். Mp4 பார்மெட்டில் பதிவிறக்கி கொள்ள முடியும். தனித்தனி அளவுகளில் பதிவிறக்கி கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது.