குறைந்த விலையில் LG MOBILES

நான்கு பேண்ட் அலைவரிசையில், இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட எல்.ஜி. மொபைல் போன் எல்.ஜி.ஏ. 390 மாடல் சந்தையில் ரூ.3,349 அதிக பட்ச விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

                                       
இதன் பரிமாணம் 114.4 X 51.8 X 13.15 மிமீ. எடை 92 கிராம். இதன் டிஸ்பிளே ஐ.பி.எஸ். எல்.சி.டி. டச் ஸ்கிரீன் திரையில் பளிச் என உள்ளது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. லவுட் ஸ்பீக்கர், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 256 எம்.பி. ராம் மெமரி தரப்பட்டுள்ளது.

நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத், யு.எஸ்.பி. ஆகியவை தரப்பட்டுள்ளன. எப்.எம். ரேடியோ இயங்குகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசேஜிங், புஷ் மெயில் சிஸ்டம் உள்ளது. இதன் பேட்டரி 1,700 mAh திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 337 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 15 மணி நேரம் பேசும் திறன் கிடைக்கிறது.

இதன் அதிக பட்ச விலை ரூ.3,349/-
குறைந்த விலையில் LG MOBILES குறைந்த விலையில் LG MOBILES Reviewed by ANBUTHIL on 10:00 AM Rating: 5
Powered by Blogger.