ஸ்மார்ட் கைப்பேசி உலகில் APPLE நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கும் Samsung நிறுவனம் Galaxy Alpha எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.iPhone களில் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 4.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 
                   
                                            
 1.8GHz மற்றும் 1.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய இரு Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.மேலும் Android 4.4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இக்கைப்பேசியானது 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 32GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.இதனை பற்றி மேலும் தெரிந்து  கொள்ள இங்கே செல்லவும் .