கூகுள் இரகசியங்கள் அம்பலமானது

தொழில்நுட்ப உலகில் 15 ஆண்டுகள் கடந்தும் ஒரு தேடல் தளம் மக்களின் நம்பகத் தன்மையுடன் இருப்பது கூகுள் மட்டுமே.பல்வேறு தேடல் தளங்கள் வந்து விட்ட நிலையிலும் மக்களை சுண்டி இழுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது கூகுள். தகவல்களை விரைவாகத் தேடித்தருவதில் கூகுளின் வேகம் மற்றும் துல்லியம் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கூகுள்

நாம் நினைக்கும் விசயங்களை எவ்வாறு கூகுளால் கொடுக்க முடிகிறது என்பது ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. இதற்கு முன்பிருந்தே இணையத் தேடல் வசதியைத் தந்து கொண்டிருக்கும் யாகூ, அல்ட்ராவிஸ்டா போன்ற தேடல் தளங்களால் தர முடியாத தகவல்களைக் கூட, அதுவும் நமக்கு எது தேவையோ அதனை சரியாக அடையாளம் கண்டு தரும் தன்மை கூகுளிடம் மட்டும் இருப்பதுதான் சிறப்பம்சமாக இருக்கிறது.
                                     


கூல் ஆக்கும் கூகுள்

பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இணையதளத்திற்கு அதன் முழு முகவரியை கொடுத்து நுழைய நினைக்கும் போது, மறந்து விடப்படும் ஒவ்வொரு பிழையும் நம்மை கடுப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.

ஆனால் கூகுளின் ஜிமெயில் கணக்குக்கு செல்வதாகட்டும், ஃபேஸ்புக் கணக்கில் நுழைவதாக இருந்தாலும், நேரடியாக அட்ரஸ் பாரில் முகவரியைக் கொடுத்து நுழையாமல், கூகுள் தேடலில் பெயரைக் கொடுத்து, சர்ச் செய்து, லிங்க் பெற்று அந்தத் தளங்களில் நுழைவதுதான் இன்று பெருவாரியான மக்களின் செயல்பாடாக மாறியிருக்கிறது.

                                


கூகுள் இரகசியம்

இந்த விடயங்கள் எப்படி கூகுளால் மட்டும் சாத்தியமாகியது என்று பார்த்தால், அதற்குப் பின் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது, இணைய வலைப்பின்னலைப் போன்றே மிகச் சிக்கலான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது.

இதன் தொழில்நுட்பமும், முழுவிபரமும் இரகசியமானதாக வைக்கப்பட்டிருந்தாலும், அதில் சில தகவல்களை பார்க்கலாம்.

* தகவல்களைத் தேட கூகுள் பாட் என்ற ஒற்றன் வகை மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி இணையதளத் தகவல்களை திரட்டி தன்னுடைய சர்வரில் அவற்றை வரிசைப்படுத்தி சேகரித்து வைத்துக் கொள்கிறது.

* ஒரு இணையதளத்தில் நுழைந்து தகவல்களைத் திரட்டியபின் அது சார்ந்த இணையதளங்களுக்கு சென்றும் தேடும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

* தேடுபவர்கள் குறிப்பிடும் வார்த்தைகளை மட்டும் தேடாமல் அதன் பொருள், அந்தக் குறிப்பிட்ட வார்த்தை சரியான வார்த்தையா, அந்த வார்த்தைக்குத் தொடர்பான மற்ற வார்த்தைகள் என்று ஒரு டிக்ஷனரியைப் படித்து தேடுவதுபோல விபரங்களைத் தேடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது பயனர் ஒருவர் தேடிய விபரங்களை மூன்று மாதங்கள் வரை அவர் கணக்கில் கூகுள் சேமித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த அளவு முன்பு 11 மாதங்களாக இருந்தது. சொல்லப் போனால் நம்மை நோட்டமிடும் பணியை சிறப்பாக செய்கிறது.

இந்த விபரங்களை சேகரித்து வைப்பதை அனைத்து தேடல் நிறுவனங்களுமே மேற்கொள்கின்றன. இந்த பணியானது பிரைவஸி பாதிப்பதாக வந்த புகார்களால் நினைவில் வைத்திருக்கும் இந்தக் கால அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மை விசயத்தை பயனர் விரும்பமாட்டார்கள் என்பதாலும், அடுத்த முறை தங்களது சேவையைப் பயன்படுத்தமாட்டார்கள் என்பதாலும் இணையதளங்கள் இதுகுறித்த உண்மை விபரங்களை வெளியிடாமல் மறைக்கின்றன.
கூகுள் இரகசியங்கள் அம்பலமானது கூகுள் இரகசியங்கள் அம்பலமானது Reviewed by ANBUTHIL on 10:00 AM Rating: 5
Powered by Blogger.