குறைந்த விலை மொபைல்களை தயாரிக்கும் டேட்டாவின்ட் நிறுவனம் ரூ. 2000 விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை தீபாவளிக்கு முன் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் விலை குறைந்த ஸ்மார்ட் போன்நேற்று வெளியானது அனைவரும் அறிந்ததே.                          2000 ரூபாய்க்கு வாழ்நாள் முழுவதம் இலவச நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்
டேட்டாவின்ட் நிறுவனம் தற்போது 3 ஸ்மார்ட் போன் மற்றும் 5 டேப்ளட்களை மாதம் 40,000 முதல் 50,000 கருவிகளை விற்பனை செய்து வரும் நிலையில் 2000 விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை தீபாவளிக்கு முன் வெளியிடவும் அதன் விற்பனையை அதிகரிக்கவே இலவச இணையதள வசதி அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் ரூபிந்தர் சிங் தெரிவித்தார்.

இலவச இணையதள வசதி அளிப்பது குறித்து மூன்று தகவல் தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றாதகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 2000 ரூபாய்க்கு வெளியாகும் இந்த ஸ்மார்ட் போன் ஆன்டிராய்டு ஓஎஸ் மூலம் இயங்குவதோடு 3.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.