தானாக குறிப்பிட்ட நேரத்தில் DOWNLOAD செய்வதற்கு

நண்பர்களே  இன்றைய கால கட்டத்தில் இணைய தளத்தில் ஒரு காலத்தில் காசுக்கு விற்க பட்டதெல்லாம் இலவசமாக கிடைப்பதால் பாடல்கள், திரைப்படங்கள், மென் பொருள்கள்,கேம்ஸ் இலவச புத்தகங்கள் என்று ஏதாவது ஒன்றைய தினமும் பதிவிறக்கம் செய்து கொண்டுதான் இருகின்றோம்.
                                        
பகல் நேரங்களில் download செய்யும் பொது நமால் வேறு வேலைகள் செய்ய முடியாது ஏனெனில் இனைய இணைப்பின் வேகம் குறைந்து விடும்.அதே போல் இந்தியாவில் இன்டர்நெட் இணைப்பு பிளான்களில் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அன்லிமிடெட் டவ்ன்லோட் வசதி கொடுக்க பட்டிருபதால் இரவில் டவ்ன்லோட் செய்வதே சிறந்தது.

இதற்காக நாம் இரவில் கண் விழித்து தேவையானவற்றை ஒவ்வொன்றாய் டவ்ன்லோட் செய்யனுமானு கேட்டா..அதற்க்கு அவசியம் இல்லை நீங்க இரவில் கண்விழித்து download செய்யவேண்டிய அவசியம் இல்லை.
.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் பகலில் உங்களுக்கு தேவையானவற்றை சர்ச் செய்து டவ்ன்லோட் செய்ய வேண்டிய வற்றின் URL இணைப்பை மட்டும் காபி பேஸ்ட் செய்தால் போதும்

நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் தானாக டவ்ன்லோட் செய்ய ஆரம்பிக்கும் .நீங்கள் குறிக்கும் நேரத்தில் அனைத்து டவ்ன்லோட் களையும் நிறுத்தி விட்டு . கம்ப்யூட்டரை சட்டவ்ன் பண்ணிவிடும்.

இதன் சிறப்பம்சம் வேகமாக கிடைக்கும் மிரர்களில் இருந்து டவ்ன்லோட் செய்யும்.

இடையில் எதிர்பாராமல் மின் சாரம் கட் ஆனாலும் திரும்பி எப்போது ஸ்டார்ட் பண்ணினாலும் விட்ட இடத்திலிருந்து டவ்ன்லோடை தொடரும். மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்காது.

ஒரே நேரத்தில் நூறு டவ்ன்லோட் ஆணை கொடுத்தாலும் அனைத்தையும் ஒவ்வொன்றாய் டவ்ன்லோட் செய்து முடித்துவிடும்.நீங்கள் டென்ஷன் இல்லாமல் படுத்து தூங்கலாம்.

அதற்கு பயன் படும் மென் பொருள் தான் Download Accelerator Plus
தானாக குறிப்பிட்ட நேரத்தில் DOWNLOAD செய்வதற்கு தானாக  குறிப்பிட்ட நேரத்தில் DOWNLOAD செய்வதற்கு Reviewed by அன்பை தேடி அன்பு on 3:00 PM Rating: 5
Powered by Blogger.