ஆன்டிராய்டு போனில் தமிழில் டைப் செய்ய சிறந்த Application

ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றீர்களா, ஆன்டிராய்டு போனில் ஆங்கிலத்தில் செய்திகளை எழுத சிரமமாக இருக்கின்றதா. இந்த தமிழ் செயலியை (அப்ளிகேஷன்) பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆமாங்க உங்க ஆன்டிராய்டு போனில் தமிழில் டைப் செய்ய பல ஆன்டிராய்டு செயலிகள் இருக்கின்றது.

எழுத்தாணி 2 செயலி மூலம் உங்கள் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போனில் தமிழில் டைப் செய்ய முடியும்.கூகுளின் ப்ளே ஸ்டோர் சென்றால் இந்த செயலியை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

                                                     Cover art
எழுத்தாணி 2 செயலியை உபயோகிக்க உங்க ஸ்மார்ட் போனில் ஆன்டிராய்டு ஓஎஸ் 2.0 மற்றும் அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். இதை உபயோகிக்க டெக்ஸ்ட் பாக்ஸில் அழுத்தி அதில் இன்புட் மெத்தட் சென்று எழுத்தாணியை தேர்வு செய்ய வேண்டும். ஆன்டிராய்டு 3.0 மற்றும் அதற்கு மேலான வகைகளை பயன்படுத்துபவர்கள் செட்டிங்ஸ் - லாங்குவேஜ் அண்டு இன்புட் - கான்பிகர் இன்புட் மெத்தட்ஸ் - எழுத்தாணியை எனேபல் செய்ய வேண்டும். ஆன்டிராய்டு 4.0 மற்றும் அதற்கு மேலான வகைகளை பயன்படுத்துபவர்கள் செட்டிங்ஸ் - லாங்குவேஜ் அண்டு இன்புட் - எழுத்தாணியை எனேபல் செய்ய வேண்டும்.

இது போன்ற மற்ற தமிழ் சார்ந்த செயலிகளை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து நம் தளத்தோடு இணைந்திருங்கள்.

தரவிறக்கம் செய்ய:இங்கே 
ஆன்டிராய்டு போனில் தமிழில் டைப் செய்ய சிறந்த Application ஆன்டிராய்டு  போனில் தமிழில் டைப் செய்ய சிறந்த Application Reviewed by ANBUTHIL on 10:30 AM Rating: 5
Powered by Blogger.