உங்கள் கணினியின் செயல்பாட்டு வேகம் குறைவாக உள்ளதா?

உங்களுடைய கணினி அடிக்கடி மருத்தொடக்கம் (RESTART) ஆகின்றதா ? உங்கள் கணினியின் செயல்பாட்டு வேகம் குறைவாக உள்ளதா ?இதற்கான காரணம் ஒரு வேலை நம்முடைய கணினியின் வெப்பம் அதிகரிப்பதால் இருக்கலாம் .அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும் . உங்கள் கணினியின் அனைத்து பாகங்களின் வெப்ப அளவினையும் அறிந்து கொள்வதுடன் குளிர்விக்கும் மின்விசிறி ஓடும் வேகத்தையும் மாற்ற உதவுகிறது.மற்றவற்றை போன்று அல்லாமல் இது உங்கள் கணினியின் வண்வட்டையும் (HARD DISK) தொடர்பு கொண்டு அவற்றின் வெப்ப அளவினை நமக்கு காட்டுகின்றது .இந்த மென்பொருள் தாய்ப்பலகையில் (MOTHER BOARD) இருக்கும் டிஜிட்டல் டெம்பரேச்சர் சென்சொர் எனப்படும் வெப்ப உணரிகளின் மூலம் வெப்ப அளவினை கணக்கிட்டு அதற்கேற்ப மின்விசிறியின் வேகத்தை மாற்றியமைக்கிறது.


அதனால் கணினியுடன் சி.பி.யு கேபினெட்டில் (CPU CABINET ) இருந்து வரும் சத்தம் குறைகிறது .


                                            

இது ப்ராசரில் உள்ள ஒவ்வொரு உள்ளகத்தின் பயன்பாட்டையும் ,வெப்ப அளவையும் காட்டுகிறது . இது விண்டோஸ் 9X முதல் விண்டோஸ் 7 வரை உள்ள இல்லா இயங்குதளங்களிலும் இயங்குகிறது . இவை 64 பிட் இயங்குதலத்திலும் சிக்கலின்றி இயங்குகிறது .
உங்கள் கணினியின் செயல்பாட்டு வேகம் குறைவாக உள்ளதா? உங்கள் கணினியின் செயல்பாட்டு வேகம் குறைவாக உள்ளதா? Reviewed by ANBUTHIL on 3:00 PM Rating: 5
Powered by Blogger.