Responsive Ad

Laptop வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகள்

Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க் கொண்டிருக்கும்.

இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

முதலில்..


எடை:

தாங்கள் அடிக்கடி பயணம் செய்பவர் என்றால் எடை குறைந்த அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். எடை குறையக்குறைய விலை அதிகமாகும். ஒருவேளை எடை அதிகமான லேப்டாப்பை வாங்கி இருந்தால் அதை வீட்டிலே வைத்துவிட்டுச் செல்லவும்.சூடாகும் தன்மை:
தாங்கள் வாங்க நினைக்கும் மடிக்கணினி எவ்வளவு வெப்பம் உமிழும் என நன்கு தெரிந்துகொண்டு வாங்கவும்.விலை மலிவு என, சரியான கட்டமைப்பு இல்லாத மடிக்கணினி வாங்குவது தங்களின் தொடைக்கு தோசைக்கல் வாங்குவது போன்றது.

நினைவகம்:
பல நிறுவனங்கள் குறைந்தது 2 ஜிபி நினைவகம் உள்ள மடிக்கனினிகளை வெளியிடுகின்றன. ஆனால் அவை 4ஜிபி யாக எதிர்காலத்தில் உயர்த்திக்கொள்ளும் வசதி படைத்தததா என விசாரித்து வாங்கவும்.


Bettary:

இயன்றால் 9-ஸெல் மின்கலம் வாங்க முயற்சிக்கவும். தங்களின் கணினிப் பயன்பாடு அதிகம் என்றாள் 2 மின்கலங்களை வாங்கவும். நெடும் பயணத்தின் போது அவை பெரிதும் பயன்படும்.


ஆயுள்:

ஒரு லேப்டாப் குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் சிறப்பாக உழைக்கும். ஆனால் எந்தக் கம்பெனியும் ஒரு வருடத்திற்கு மேல் உத்திரவாதம் தருவது இல்லை.

சேவை மையம்:
பல லேப்டாப் விற்கும் விற்பணையாளர்கள் சர்வீசிங் செய்து தருவது இல்லை. அங்கீகாரம் பெற்ற சேவை மையம் எங்கு உள்ளது என விசாரித்து தெரிந்து கொள்ளவும்.

விலை: 20000 ரூபாய் முதல் லேப்டாப் கிடைக்கிறது. ஆனால் நினைவிருக்கட்டும், லேப்டாப் ஐப் பொருத்தவரை விலை குறையக்குறைய தரம் மற்றும் வேகம் (பிராசசர்) குறைவாக இருக்கும்.அளவு: 

பெரிய திரை இருப்பது தான் பெருமை என நினைத்து பலர் கங்காரு போல் பெரிய லேப்டாப்பை மடியில் சுமந்து இருக்கிறார்கள்.லேப்டாப் அளவு சிறியதாக இருக்கும்போது எடுத்துச்செல்வது எளிதாகிரது.

ஒவ்வொரு நிறுவனமும் 4 வகை தயாரிப்புகளை வெளியீடு செய்கின்றன.

வகை 1 : 20000 முதல் 30000 வரை.

அம்சங்கள்: விலை குறைவு, குறைந்த தரக் கட்டமைப்பு மற்றும் வேகம்.
யாருக்கு உகந்தது: மின்னஞ்சல், இன்டர்நெட், ஆஃபீஸ் மட்டுமே பயன்படுத்துவோர் அல்லது லேப்டாப் என்று ஒன்று இருந்தால் போதும் என நினைப்போர்.

வகை 2: 30000 முதல் 45000 வரை.

முதுகலை மாணவர், அலுவலக மென்பொருள் பயன்படுத்துவோர், காலேஜ் ப்ராஜெக்ட்ஸ் செய்வோர். சற்று கணினி அதிகமாகப் பயன்படுத்தும் எவரும் வாங்கலாம்.

வகை 3: 45000 முதல் 60000 வரை.

Graphics Designers, Gamers, System Admins, Real Mobility Wanted Users.

வகை 4: 60000 முதல் 130000 வரை. 

அப்பாவிடம் அதிக பணம் உள்ளோர்.

தொழில்நுட்ப அம்சங்கள்:

1. Dual Core or Quad Core Processor
2. 2GB DDR2 RAM is Minimum
3. 160GB or 250GB HDD
4. Bluetooth
5. WiFi
6. Memory Card Reader Slot
7. Webcam
8. DVD RW Drive
மேற்கண்ட அனைத்தும் அவசியமாக இருக்கவேண்டும். முகம், கைரெகை பார்க்கும் லேப்டாப் பெருமை அடித்துக்கொள்ள உதவுமே அன்றி மிகவும் இன்றியமையாத் தேவை அல்ல.புதிதாக லேப்டாப் பயன்படுத்தும் முன் வலது ஆள்காட்டி விரலில் தேங்காய் எண்ணை தேய்த்துப் பயன்படுத்தவும்.........