ஜிமெயில் இன்பாக்ஸ் ஸ்கேனர் இலவசமாக
நமது மெயிலுக்கு வரும் அத்தனை மெயில்களும் எவ்வளவு அளவுகளில் உள்ளது என சோதனைகளை செய்வதற்கு நமக்கு உதவுவது FindBigmail என்னும் சேவையாகும். இந்த சேவை, நம் ஜிமெயில் இன்பாக்ஸினை முழுமையாக ஸ்கேன் செய்து, எந்த எந்த மெயில்கள், அதிக அளவில் இணைப்புகளைக் கொண்டுள்ளன என்று காட்டும். அவற்றைத் தனியே வடிகட்டும்.
1. முதலில் http://findbigmail.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
![]() |
Add caption |
2. அங்கு உங்கள் இமெயில் முகவரியைத் தரச் சொல்லி கட்டம் கிடைக்கும். பின்னர், அருகே உள்ள பட்டனில் கிளிக் செய்தவுடன், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டில் நுழைய, உங்கள் அனுமதி கேட்கப்படும்.
3. அனுமதி கொடுத்தவுடன், FindBigmail தன் பணியைத் தொடங்கும். பெரிய அளவிலான இணைப்புகள், படங்கள், டாகுமெண்ட்கள் மற்றும் பிற பைல்களைக் காட்டும். உங்கள் மெயில் இன்பாக்ஸைப் பொறுத்து, இந்த பணி முடிய 30 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் ஆகலாம். இந்த பணி நடக்கையில், நீங்கள் தொடர்ந்து உங்கள் இமெயில் பார்க்கும் பணியையும் மேற்கொள்ளலாம்.
4. தேடல் நடக்கும்போதே, எத்தனை மெயில்களில் அதிக அளவில் இணைப்புகள் உள்ளன என்ற செய்தி காட்டப்படும். இந்த தேடல் முடியும் வரை, உங்கள் பிரவுசரை மூடக் கூடாது. முடிவில், மிகப் பெரிய மெசேஜ்களின் எண்ணிக்கை, ஓரளவில் இடத்தைப் பிடித்தி ருக்கும் மெயில்களின் எண்ணிக்கை என சார்ட் மூலம் காட்டப்படும். அதன் அருகே உள்ள லிங்க்கில் கிளிக் செய்தால், அவை பட்டியலி டப் படும். அவற்றில் கிளிக் செய்து, படித்துப் பார்த்து, தேவையில்லை என்றால், அவற்றை நீக்கிவிடலாம்.
இந்த சேவை, பல புதிய லேபிள்களையும் உருவாக்கும். அவற்றில் அதிக அளவில் இடம் பிடிக்கும் டாப் 20 இமெயில்கள், பின்னர் அளவின் அடிப்படையில் இடம் கொண்டிருக்கும் இமெயில்களுக்கான லேபிள்கள் இருக்கும். இவற்றை ஜிமெயிலின் பக்கவாட்டில் இருக்கும் சைட்பாரில் காணலாம். இவற்றைக் கிளிக் செய்து, மொத்தமாகவும், தனித்தனியாகவும் அழிக்கலாம். மொத்தமாக அழிக்க, Settings > Labels சென்று அழிக்கலாம்.ஒவ்வொன்றாகவும் நீக்கலாம். இவற்றை அழிக்கையில், எவ்வளவு இடம் கிடைக்கிறது எனவும் காட்டப்படும்.
ஜிமெயில் இன்பாக்ஸ் ஸ்கேனர் இலவசமாக
Reviewed by அன்பை தேடி அன்பு
on
2:41 PM
Rating:
