தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதுமக்களுக்கும் அதிமுக்கிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவானது, மாண்புமிகு முதலமைச்சரின் கோரிக்கை தீர்வு குழுவாக செயல்படுகிறது. விதிமுறைகள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாமல் நியாயமாகவும் பரிவுடனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன.
                                            
கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு பதில் நடவடிக்கைகள் இணைய வழி கண்காணிப்பு முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலிருந்தும் உணர்திறனுடன் தேவையான சரியான பயனுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொறு துறைதோறும் மற்றும் மாவட்டங்கள்தோறும் தொடர்பு அலுவலர்களைக் கொண்டு நடத்தி தாமதங்கள் தவிர்க்கப்படுகிறது


(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....

முதலமைச்சரின் தனிப் பிரிவு ,
தலைமைச் செயலகம் ,
சென்னை - 600 009.
தொலை பேசி எண்  : 044 - 2567 1764
தொலைப்பிரதி எண்     : 044 - 2567 6929
மின்னஞ்சல் : cmcell@tn.gov.in
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம் Reviewed by ANBUTHIL on 6:37 PM Rating: 5
Powered by Blogger.