TIPS
WINDOWS 7 இல் மறைத்து வைத்திருக்கும் பைல்களை கண்டுபிடிப்பது எப்படி?
நாம் கணியில் பல முக்கிய பைல்களை வைத்திருப்போம்.இது அடுத்தவர்கள் பார்க்கக்கூடாது என்று சிலவற்றை நினைப்போம்.இதற்காக மென்பொருளை உபயோகித்து பூட்டு போட்டு பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை.மிக முக்கியம் என்றாலே முயற்சி செய்யுங்கள்.மேலும் நம்மிடம் வரும் நண்பர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள பைல்களை பார்ப்பது மிக அரிது.எனவே கீழே காணும் முறைகளைப் பயன்படுத்தி பைல்களை பாதுகாத்திடுங்கள்.
படி 1:
கணினியை ஆன் செய்து மறைக்க விரும்பும் பைலின் மீது ரைட் கிளிக் (RIGHT CLIK)செய்யவும்.அதில் properties தேர்வு செய்யவும்.உதவிக்கு படம் 1 ஐ பார்க்கவும்.
படம் 1
படி 2:
பின் கீழே காணப்படும் Hidden என்பதை கிளிக் செய்யவும்.பின்ok கிளிக் செய்யுங்கள்.அதன்பின் தோன்றுவதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யுங்கள்.எதை தேர்ந்தெடுத்தாலும் பிரச்னை இல்லை.இரண்டாவதை தேர்ந்தெடுப்பது சிறந்தது.பின் ok கிளிக் செயுங்கள்.உதவிக்கு உதவிக்கு படம் 2 ஐ பார்க்கவும்.
படம் 2
நண்பர்களே உங்கள் பைல் காணமல் போய்விட்டதா?இப்போது அதை எப்படி மீண்டும் எடுத்து பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
படி 1:
முதலில் WINDOW KEY+E அழுத்தி MY COMPUTER செல்லுங்கள்.இடது ஓரத்தில் உள்ள Organize என்பதை கிளிக் செய்யுங்கள்.இதன் பின் என்ன செய்ய வேண்டும் என்பதை கிழுள்ள படங்களே தெளிவாக காட்டும்.உங்கள் கணினியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பைல்களும் இதன் மூலம் வெளியே எடுக்கலாம்.
படம் 3
படம் 4
அவ்வளவுதான் நண்பர்களே உங்கள் பைல் பழைய மாதிரி வந்துவிடும்.மீண்டும் அதனை பயன்படுத்திவிட்டு மறைத்துவிடலாம்.