நாம் இலகுவான பாவனைக்காக MS Word இல் உள்ள ஆவணங்கள் மற்றும் மின் புத்தகங்களை PDF Files ஆகவே சேமித்து வைப்பதுண்டு. இதற்காக நாம் Adobe Readerஐ நமது கணினியில் நிறுவியிருப்போம்.இப்போது நீங்கள் வைத்திருக்கும் PDF Filesகளைகணினியானது வாசித்துக் காட்டினால் எப்படியிருக்கும் என எண்ணுகின்றீர்களா? ஆம், இதோ உங்களுக்காகவே இப்பதிவு.
                                                    
இதற்காக மேலதிகமாக மென்பொருட்களை நிறுவவேண்டிய அவசியமுமில்லை. PDF Filesஐ இப்போ திறந்துகொள்ளுங்கள். இதிலே Viewஎன்பதை கிளிக் செய்யுங்கள்.

                                         
இப்போ இதிலே “ Read Out Loud “ என்பதை கிளிக் செய்து தொடர்சியாக உள்ள“ Activate Read Out Loud ” என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

                                        
அவ்வளவுந்தான். இப்போ உங்கள் PDF File இல் உள்ள வசனங்களை கிளிக் செய்யும்போதுகணினி அதனை வாசித்துக் காட்டும்