பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. தற்போது iOS, Android சாதனங்களில் பயன்படுத்தப்படும் இந்த அப்பிளிக்கேஷன்களில் Facebook Save எனும் வசதி தரப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இடங்களுக்கான பேஸ்புக் பக்கங்கள், அவற்றின் செய்திகளுக்கான இணையத்தள இணைப்புக்கள் (News Feed Links) என்பவற்றினை ஒரே இடத்தில் சேமித்து வைத்திருக்க முடியும்.
                    

இந்த சேமிப்பு பொத்தான் அப்பிளிக்கேஷன்களின் கீழ் பகுதியில் வலது பக்க மூலையில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.