மிகவும் பாதுகாப்பான EMAIL தரும் தளம்

இமெயில் தரும் தளங்களில் ஒன்றான GMX என அழைக்கப்படும் தளம் மிகவும் பாதுகாப்பானதாக கூறப்படுகிறது. ஸ்பேம் மெயில்கள் நன்றாக வடிகட்டப்படுவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. இணையத்தளம் வழியாக மட்டுமின்றி பி.ஒ.பி. அல்லது ஐமேப் வழியாகவும் உங்கள் இமெயில் களை கையாளலாம். ஒன்லைனில் நமக்கு வந்த கடிதங்கள் மற்றும் அதனுடன் இணைந்து வந்த பைல்களை பாதுகாப்பாக வைத்திட 5 ஜிபி இடம் தரப்படுகிறது.
                                               
மெசெஜ்கள் 50 எம்.பி., வரை அனு மதிக்கப்படுகின்றன. ஜி.எம்.எஸ் மெயில் மூலமாக உங்கள் பிற இமெயில் அக்கவுண்ட்களிலிருந்தும் (யாஹூ, லைவ் ஹாட் மெயில் உட்பட) இமெயில்களை பெறலாம்.

அனைத்து மெயில்களும் ஸ்பேம் மெயில்களுக்கான பில்டர்கள் மூலமே வருவதால் அத்தகைய மெயில்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனால், இன் பக்ஸ்கள் சுத்தமாக இருக்கின்றன. நம்மால் இமெயில்களை பார்வையிட முடியாத நிலையில் தானாக வெகேஷன் ரிப்ளை அனுப்பும் வசதி இதில் உண்டு.

அட்ரஸ்புக்குடன் கலண்டர் ஒன்றும் ஜி.எம்.எக்ஸ்., மெயில் பக்ஸில் உண்டு.

மெயில்களை பிரித்து வைக்க போல்டர் வசதியும் தரப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் எந்த போல்டரிலிருந்தும் மெயில்களை அழிக்கலாம்.

தற்போது இந்த இமெயில் சேவையினை உலகளவில் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். புதியதாக இமெயில் பயன்படுத்த விரும்புபவர் களும், புதிய இமெயில் சேவை ஒன்றைக் கூடுதலாக பயன்படுத்த திட்டமிடுபவர் களும் இந்த சேவையினை பெறலாம்.இதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
வலைதள முகவரி சுட்டி
மிகவும் பாதுகாப்பான EMAIL தரும் தளம் மிகவும் பாதுகாப்பான EMAIL தரும் தளம் Reviewed by அன்பை தேடி அன்பு on 10:30 AM Rating: 5
Powered by Blogger.