கணினியின் வன்பொருட்பாகங்களையும் (Hardware), அப்பிளிக்கேஷன் மென்பொருட்களையும் ஒருங்கிணைத்து செயலாற்றுவதில் Driver மென்பொருட்களின் பயன்பாடு அளப்பரியதாகும். இவ்வாறு குறித்த Driver மென்பொருட்கள் கணினியில் நிறுவுப்படாதவிடத்து அந்த Driver சார்ந்த சேவைகளை பெறமுடியாது போகும்.

எனவே அம்மென்பொருளினை நிறுவ வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் உண்டாகும் சிரமங்களை தவிர்ப்பதற்காக DriverEasy எனும் மென்பொருள் பயன்படுகின்றது. 

இம்மென்பொருளானது கணினியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்துவிதமான வன்பொருட்கள் மற்றும் அவை தொடர்பாக நிறுவப்பட்டுள்ள Driver மென்பொருட்கள் என்பனவற்றை scan செய்து நிறுவப்படவேண்டி Driver மென்பொருட்களை பட்டியலிட்டுக் காட்டும். அதன் பின்னர் Download என்பதனை கிளிக் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.