கூகுளை போன்ற ஒரு சிறப்பான இணையதளம்

நாம் இணையத்தில் உலாவும் போது பல தளங்களுக்கு செல்லுவோம் அதில் சில தளங்களில் உள்ள விஷயங்கள் நமக்கு மிகவும் பிடித்து போனால் நாம் அந்த தளங்களுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்துவிடுவோம். அதைப்போல் இதே மாதிரி மற்ற தளங்கள் உள்ளனவா என்றும் தேட ஆரம்பித்து விடுவோம் அந்த மாதிரியான தருணங்களில் நாம் எப்படி தேடுவது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. நாம் பொதுவாக தளங்களை ஒரு குறிப்பிட்ட குறிச்சொற்கள் மூலம் தான் தேடுவோம். ஒரு தளம் பிடித்து இருந்தால் அந்த தளத்தில் உள்ள குறிசொற்கள் மூலம் அதே மாதரியான தளங்களை தேடலாம்.
                                                     

அவ்வாறு தேடும் போதும் நாம் எதிர்பார்த்தது கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஒரே போன்ற தளங்களை எவ்வாறு தேடுவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இதற்க்காண சில வழிகள் :

1.SITENEXTDOOR :

இதுவும் கூகுளை போன்ற ஒரு இணையதளம் இதன் மூலம் நாம் ஒரே போன்ற இணையதளத்தை மிக எளிதாக தேடலாம். இதில் நாம் இணையதளத்தின் முகவரியை கொடுத்தும் தேடலாம் அது மட்டுமல்ல இதில் குறிச்சொல் கொடுத்தும் தேடலாம்.


                                         
இந்த தளத்திற்கு செல்ல : www.sitenextdoor.com


2. கூகிள் :

தேடுதல் என்று வந்த பிறகு கூகிள் இல்லைனா எப்படி ?. நாம் அதிகமாக பயன்படுத்த கூடிய தேடுபொறி கூகிள் தான். இதன் மூலமாகவும் நாம் ஒரே மாதிரியான தளங்களை தேடலாம் அதற்க்கான குறிச்சொல் இதோ.

related: anbuthil .com

related என்று தட்டச்சு  செய்து அதன் பிறகு உங்களுக்கு தேவையான இணையதளத்தை கொடுத்து தேடுங்கள்நீங்கள் கொடுத்த தளத்தை போன்று உள்ள தளங்கள் பட்டியலிடப் படும்.
கூகுளை போன்ற ஒரு சிறப்பான இணையதளம் கூகுளை போன்ற ஒரு சிறப்பான இணையதளம் Reviewed by ANBUTHIL on 7:35 PM Rating: 5
Powered by Blogger.