தொழில்நுட்பம்
டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க
தினமும் இணையத்தில் திரைப்படங்களை பலர் டவுன்லோட் செய்கிறோம். டவுன்லோட் செய்த படங்களை பார்க்க கணிணியில் பல வீடியோ பிளேயர்கள் உள்ளன. உதாரணமாக KM Player , VLC Media Playerபோன்ற பிளேயர்கள் எவ்வித திரைப்படங்களையும் , வீடியோகளையும் பார்க்க உதவுகின்றன.
சிலருக்கு கணிணியில் பார்ப்பது பிடிக்காது. வீட்டில் டிவியில் பார்க்கவே விரும்புவர். டிவியில் வீட்டில் உள்ளவர்களுடன் அல்லது நண்பர்களுடன் பார்பதற்க்கு டிவியே சிறந்தது. இதற்கு டிவிடி பிளேயர் துணைபுரிகிறது. தற்போது வரும் டிவிடி பிளேயர்கள் பென் டிரைவ் வசதியோடு வருகிறது. இதன் மூலம் எளிதாக டவுன்லோட் செய்த திரைப்படங்களை பென் டிரைவ் மூலம் எளிதாக டிவிடி பிளேயர் துணை கொண்டு டிவியில் பார்க்கலாம்.
ஆனால் டிவிடி பிளேயர் எல்லா வகை வீடியோகளையும் சப்போர்ட் செய்யாது. பெரும்பாலும் டிவிடி பிளேயர்கள் DivX , XviD கோப்புகளையே சப்போர்ட் செய்யும். பலர் .avi என முடியும் வீடியோகளை டவுன்லோட் செய்து விட்டு அது அவர்களது பிளேயரில் ஏன் ஓடவில்லை என தெரியாமல் இருப்பர். நீங்கள் .avi வீடியோகளை டவுன்லோட் செய்தாலும் அவை எந்த Codec மூலம் உருவாக்கப்பட்டது என்பதே முக்கியம். இங்குCodec என்பது DivX , XviD ஆகியவை.
டவுன்லோட் செய்த திரைப்படங்களை கீழே உள்ள இரு வழிகளில் டிவிடி பிளேயர் மூலம் நீங்கள் டிவியில் பார்க்கலாம்.
DivX அல்லது XviD சப்போர்ட் செய்யும் டிவிடி பிளேயராக இருந்தால் நேரடியாக படங்களை பென் டிரைவில் காப்பி(copy) செய்தோ அல்லது டிவிடியில்(DVD) பதிவு(write or burn) செய்தோ பார்க்கலாம்.
DivX அல்லது XviD சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயராக இருந்தால் படங்களை டிவிடி(DVD) வீடியோ கோப்புகளாக மாற்றியே பார்க்க முடியும்.
நீங்கள் டவுன்லோட் செய்யும் போது DivX , XviD Codec ஆல் உருவாக்கப்பட்ட திரைப்படங்களை டவுன்லோட் செய்தால் வேலை எளிது. அவைகளை அப்படியே உங்கள் பென் டிரைவில் அல்லது டிவிடியில்(DVD) போட்டு டிவிடி பிளேயரில் பார்த்து விடலாம். நீங்கள் டவுன்லோட் செய்யும் தளத்தில் வீடியோவின் விபரம் கொடுத்திருப்பார்கள். உதாரணமாக கீழே உள்ளது போல் கொடுத்திருப்பார்கள்.
Codec Id : XVID
Codec : XviD
Duration (ms) : 1h 39mn
Bitrate : 860 Kbps
Width : 640 pixels
Height : 272 pixels
Aspect ratio : 2.35:1
Framerate : 23.976 fps
மேலே உள்ள வீடியோ விபரத்தில் Codec என இருக்கும் இடத்தில் DivX,XviDஎன இருக்கும் வீடியோகளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பெரும்பாலும் திரைபடத்தின் பெயரிலேயே கொடுத்திருப்பார் உதாரணமாக கீழே உள்ள திரைபடத்தின் பெயரிலேயே XviD அல்லது DivXஎன கொடுத்திருப்பார்கள்.
DivX,XviD தவிர X264,H264 என பல Codec உள்ளன. அவைகள் பெரும்பாலும் டிவிடி பிளேயரில் ஓடாது. தற்போது mkv வடிவ கோப்புகள் மூலம் மிக சிறிய அளவில் தெளிவான திரைப்படங்கள் டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன. mkv கோப்புகள் டிவிடி பிளேயரில் ஓடாது. mkv கோப்புகள் பெரும்பாலும் X264,H264 Codec பயன்படுத்தியே உருவாகபடுகின்றன. இது மட்டுமே காரணம் இல்லை என்றாலும் X264,H264 Codec மூலம் உருவாக்கப்டும் வீடியோகளை உங்கள் டிவிடி பிளேயர் சப்போர்ட் செய்யாது.mkv கோப்புகளையும் , மற்ற கோப்புகளையும் XviD அல்லது DivX Codec மூல கோப்புகளாக மாற்றி பென் டிரைவில் போட்டு பார்க்கலாம்.
மேலும் DivX,XviD சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயர்களும் உள்ளன. அவ்வகை பிளேயரில் நீங்கள் டவுன்லோட் செய்த படங்களை பார்க்க வேண்டுமானால் அவற்றை டிவிடி(DVD) வீடியோ கோப்புகளாக மாற்றியே பார்க்க முடியும். அதாவது VOB வீடியோ கோப்புகளாக மாற்றி கீழே உள்ள போல்டர் அமைப்பில் மாற்ற வேண்டும். இதற்கு தனி மென்பொருள் துணை வேண்டும்.
மேலே உள்ளது போல் AUDIO_TS,VIDEO_TS என இரு போல்டர்களும்,VIDEO_TS போல்டர் உள்ளே வீடியோ கோப்புகளும்(2வது படம்) இருக்கும். இதேபோல் நீங்கள் டவுன்லோட் செய்த திரைபடத்தை மாற்றி டிவிடியில் எழுதி(Write or Burn) செய்து பிளேயரில் போட்டு பார்க்கலாம்.
XviD,DviX மூல கோப்புகளாகவும் மற்றும் டிவிடி(DVD) அமைப்பில் கோப்புகளாகவும்(VOB) மாற்ற இலவச மென்பொருள்கள் உள்ளன. அந்த மென்பொருள்களை பற்றியும் , எப்படி மென்பொருள்களை பயன்படுத்தி மாற்றுவது என்பதை பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.