computer
இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 5 தளங்கள்
இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆகவே நம் கணினியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள் இணையத்தில் ஏராளம். அதில் சிறந்த 5 தளங்களை பற்றி கீழே காண்போம்.
1. Speed Test
கணினியின் இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளம் இது. மற்றும் நமக்கு கிடைத்த முடிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.
பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான Mcafee நிறுவனத்தின் வெளியீடாகும். இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.
இந்த தளத்தில் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.