கணினிகளில் பெரும்பாலும் யுஎஸ்பி மூலம் வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கணினியில் நம் அனுமதி இல்லாமல் யுஎஸ்பி பயன்படுத்துவதைத் தடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.
                                             Predator screenshot
பள்ளி முதல் கல்லூரி வரை அனைவரின் கணினியிலும் அனுமதி
இல்லாமல் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க ஒரு இலவச
மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் நம் கணினியில்
யாரவது யுஎஸ்பி டிரைவ் மாட்டினால் உடனடியாக கடவுச்சொல்
கேட்கும் 10 நொடிகளுக்குள் கடவுச்சொல் ஏதும் கொடுக்கவில்லை
என்றால் அலாரம் மூலம் நமக்கு உணர்த்தும். இப்போதைய
சூழ்நிலையில் கண்டிப்பாக நம் அனைவருக்கும் தேவையான
மென்பொருள். இந்த சுட்டியை சொடுக்கி இந்த மென்பொருளை
தரவிரக்கிக்கொள்ளலாம்.

                                                                   Download

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி யுஎஸ்பி டிரைவ் – ஐ கணினியில்
நம் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாத வண்ணம் செய்யலாம்.