நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி

சென்ற பதிவில் கூகிள் க்ரோம் உலாவியில், வலைப்பக்கங்களில் பொருள் புரியாத சொற்களுக்கு,Google Dictionary நீட்சியின் மூலமாக எப்படி அதே திரையில் விளக்கம் காண்பது என்பதை பார்த்தோம். இன்று, இது போன்ற ஒரு உபயோகமான வசதியை அளிக்கும் Inline GoogleDefinitions எனும் நெருப்புநரி உலாவிக்கான நீட்சியை குறித்து பார்க்கலாம்.

                                     


இந்த நீட்சியை தரவிறக்கி நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, ஒரு முறை உலாவியை ரீஸ்டார்ட் செய்யவேண்டியிருக்கும்.


                                       


இனி வலைப்பக்கங்களில் பொருள் அல்லது விளக்கம் தேவைப்படும் வார்த்தையை தேர்வு செய்து, மௌசின் வலது பொத்தானை அழுத்தி, Inline Definitions கருவியை சொடுக்குங்கள்.


                           


நீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் அதே வலைப்பக்கத்திலேயே அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கான பொருள் மற்றும் விளக்கங்கள், பல்வேறு தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டு வழங்கப்படும் என்பது இதனுடைய சிறப்பம்சம்.


                                 Inline Google Definitions - நீட்சி தரவிறக்க
நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி Reviewed by அன்பை தேடி அன்பு on 9:00 PM Rating: 5
Powered by Blogger.