மனிதன் ஏதாவது கெட்டப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் அதில் இருந்து வெளியே வருவது என்பது மிக மிக கடினமான காரியம் என்று  நினைத்திருக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்படி 21 நாட்களில் மனிதன் தன்னிடம் இருக்கும் அனைத்து குறைகளையும் ஒவ்வொன்றாக நீக்க உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

                                                   

21 நாட்களில் கெட்டப்பழக்கத்தை நீக்கலாம்,

குடிப்பழக்கம் மட்டும் கெட்டப்பழக்கம் என்று சொல்வதைவிட பொய் சொல்வதும் கெட்டப்பழக்கம் தான் இது போன்ற அனைத்து கெட்டப்பழக்கத்தையும் 21 நாட்களில் நீக்க நமக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்க ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.

இணையதள முகவரி : http://21habit.com

இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் மேல் இருக்கும் Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு கணக்கு இலவசமாக உருவாக்கி கொள்ளவேண்டும், அடுத்து முழு நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் சென்று இன்று நான் சிகரெட் பிடிக்கவில்லை , அல்லது இன்று நான் மது அருந்தவில்லை என்று ஒவ்வொரு நாளும் நாம் கெட்டப்பழக்கத்தைவிட்டு நீக்கியதை இங்கு தெரியப்படுத்தாலாம், 21 நாட்களில் நாம் கெட்டப்பழக்கங்களை விட வேண்டும் என்று ஒரு தளம் முயற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் நம்மிடம் கேட்கும் இந்தத்தளதிற்கு உண்மையாக நடந்து கொண்டாலே நாம் எந்த கெட்டப்பழக்கத்தையும் விடலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.