நீங்களே வடிவமைக்கலாம் " தீபாவளி வாழ்த்து அட்டை"

தீபாவளி வரப்போகிறது! எல்லாரும் தங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்ப ஆரம்பித்திருப்பீர்கள்.(இப்ப எல்லாம் யாரு வாழ்த்து அட்டை அனுப்புறாங்கன்னு கேக்காதிங்க இந்த பதிவு நீங்கள் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே ) உங்களைப் போல நானும் வாழ்த்து அட்டை அனுப்ப, நேற்று முழுவதும் இணையத்தில் உள்ள வாழ்த்து அட்டை இலவச சேவை அளிக்கும் இணைய தளங்களில் தேடிக்கொண்டிருந்தேன். கால விரயம் ஆனது தான் மிச்சம். என் விருப்பப்படி எதுவும் கிடைக்கவில்லை. எல்லா இணைய தளங்களும் ஃபிளாஷ் கோப்புகளாகத் தான் தருகிறார்கள், அதை நகல் எடுக்கக்கூட முடிவதில்லை.


                                          screen shot of card template selecting


”ஏன் நாமே ஒரு வாழ்த்து அட்டை தயாரிக்கக்கூடாது?” என்று எண்ணி ”போட்டோஷாப்பில்” ஆரம்பித்தேன். அதில் உருவாக்கிய அட்டையில் ஒரு நேர்த்தி கிடைக்கவில்லை.என்ன செய்யலாம் என்று கூகிள் பகவான் கிட்ட கேட்ட போது தான், “இந்த மென்பொருளைக்” காண்பித்தார்.

இந்த மென்பொருளின் பெயர் “Photo Card Maker". இதில் நிறைய டெம்ப்ளேட்கள் உள்ளன. அதில் உங்க போட்டோவையும்  உங்கள் வாழ்த்துச் செய்தியையும் பொதித்து, அதை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.


 தீபாவளிக்கு , நீங்களே செய்த வாழ்த்து அட்டையை நண்பர்களுக்கு அனுப்பி ஆச்சர்யப்படுத்துங்கள்.
நீங்களே வடிவமைக்கலாம் " தீபாவளி வாழ்த்து அட்டை" நீங்களே வடிவமைக்கலாம் " தீபாவளி வாழ்த்து அட்டை" Reviewed by அன்பை தேடி அன்பு on 8:22 PM Rating: 5
Powered by Blogger.