கூகிள் குரோமில் எளிதாக கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க

கிரிக்கெட் இருபது  T20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. அலுவலகத்தில் வேலையில் இருந்தாலும் நமது மனது கிரிக்கெட் மாட்சை சுற்றியே இருக்கும். ஒரு டேப்பில் கிரிக்கெட் தளங்களை திறந்து வைத்து கொண்டு அடிக்கடி ரெப்ரஷ் செய்து கொண்டு இருப்போம்.
                                             

பயர்பாக்ஸ், குரோம் உலாவிகளில் கிரிக்கெட் ஸ்கோர்களை எளிதாக தெரிந்து கொள்ள ஈஎஸ்பிஎன் தளம் வகை செய்கிறது. கீழ்க்கண்ட நீட்சிகளை உங்கள் இணைய உலாவியில் நிறுவுவதன் மூலம் இதன் பயனை பெறலாம்.


பயர்பாக்ஸ் உலாவிக்கான நீட்சி 


குரோம் உலாவிக்கான நீட்சி

இதனை நிறுவியவுடன் இணைய உலாவியில் தோன்றும் பட்டனை கிளிக் செய்தால் லேட்டஸ்ட் ஸ்கோர் விபரம், கிரிக்கெட் செய்திகள் தலைப்புகளாக தெரிய வரும். விக்கெட்டுகள் விழுந்தால் உடனே அறிவிப்பு தோன்றும்.
உலகக் கோப்பைகள் நடைபெறும்வரை வைத்திருந்து விட்டு, பிறகு நீக்கி விடுங்கள். அதிகப்படியான நீட்சிகளை நிறுவுவது உங்கள் உலாவி திறப்பதை தாமதமாக்கும்.
கூகிள் குரோமில் எளிதாக கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க கூகிள் குரோமில் எளிதாக கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க Reviewed by அன்பை தேடி அன்பு on 10:16 PM Rating: 5
Powered by Blogger.