ஒரு Software மூலம் எட்டு விதமான பணிகளை மேற்கொள்ள

வணக்கம் நண்பர்களே இந்த ஒரு software  மூலம் நீங்கள் எளிதாக எட்டு விதமான பணிகளை மேற்கொள்ளலாம் நான் பதிவிடும் சிறந்த சாப்ட்வேர்களில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன். இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இந்த சாப்ட்வேர் மூலம் நாம் ஆடியோ -வீடியோ பிளேயராக இதை உபயோகிக்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் நமது கம்யூட்டரில் உள்ள பைலை ஒப்பன் மூலம் தேர்ந்தேடுக்கவும். பின்னர் பிளே அழுத்தி படம் பார்க்கலாம்.இதில் உள்ள படத்தை ஓடும் சமயம் ப்ரேம் ஸ்டெப் பயன்படுத்தி ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம். Change Ratio மூலம் வேண்டிய அளவிற்கு படத்தை பெரிதாக சிறியதாக மாற்றிக்கொள்ளலாம். அடுத்துள்ளது Audio/Video Cutter.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். இதன் மூலம் ஆடியோ பைல்களையும்-வீடியோ பைல்களையும் வேண்டிய அளவிற்கு கட் செய்து 
வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றி வேண்டிய இடத்தில்சேமித்துக்கொள்ளலாம்.அடுத்துள்ளது ஆடியோ கன்வர்ட்டர் . கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


இதன்மூலம் உங்களது ஆடியோ பைல்களை இதன்மூலம் ஓப்பன் செய்து அதை Mp3.wav.aac.wma.flac.M4a.ac3என வேண்டிய பார்மெட்டுக்களுக்கு மாற்றி வேண்டிய இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.

இதைப்போலவே வீடியோ கன்வர்ட்டர். இதன் மூலமும் வேண்டிய பார்மெட்டுக்கு வீடியோவை சுலபமாக
மாற்றிக்கொள்ளலாம்.அடுத்துள்ளது போட்டோ கட்டர். உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படத்தை திறந்துகொண்டு அதை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக் கொள்வதோடு அல்லாமல் வேண்டிய அளவிலும் அதை கட் செய்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் இதில 100 புகைப்படங்களின் அளவையும் பார்மெட்டையும் மாற்றிக்கொள்ளலாம்.வேண்டிய அளவினை கொண்டுவர இதில் உள்ள Custom Ratio என்பதனை கிளிக் செய்யவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்து இதில் உள்ள போட்டோ ரீ -சைஸரும் நமக்குவேண்டிய அளவிற்கு புகைப்படஙகள் மாற்ற உதவுகின்றது:. அடுத்துள்ளது Slide Show. இது நம்மிடம் உள்ள புகைப்படங்களைஸ்லைட் ஷோவாக மாற்றிக்கொள்வதோடு அல்லாமல் அதில பின்னணி இசையையும் சேர்க்கலாம். படம்மாறும் நேரத்தையும செட் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


கடைசியாக இன்டர்நேட் டூல்ஸ். இதை கிளிக்செய்வதன்மூலம் இணையத்தில நாம் பார்க்கும் டெக்ஸ்ட்டை
தேர்வு செய்து அதை படிக்க செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.தேவையான அளவிற்கு விளக்கியுள்ளேன்.பதிவினைபாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள். பதிவின் நீளம
கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
ஒரு Software மூலம் எட்டு விதமான பணிகளை மேற்கொள்ள ஒரு Software மூலம் எட்டு விதமான பணிகளை மேற்கொள்ள Reviewed by ANBUTHIL on 8:09 PM Rating: 5
Powered by Blogger.