நீங்கள் youtube பிரியரா ? வீடியோக்களை firefox browserல் சிறிய அளவிலும், பேக்க்ரவுண்டில் வலைப்பக்க எழுத்துக்களும், விளம்பரங்களுமாக பார்த்து போரடித்து விட்டதா? எந்த இடையூறுகளும் இல்லாது, வீடியோவை மட்டும் சினிமா போல பார்க்க விருப்பமா?அப்படியானால்  உங்களுக்கு தான் இந்த பதிவு,


                                 வழக்கமாக யூ ட்யூப் வீடியோ உலவியில் இப்படி இருக்கும்.                         நெருப்புநரி உலவிக்கான  Youtube Cinema Extension ..,

மேலே உள்ள சுட்டியை சொடுக்கி நெருப்பு நரி நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு Options -ல் சென்று உங்கள் தேவைக்கேற்ற மாறுதல்களை செய்து கொள்ளுங்கள்.
                                                  யூ ட்யூப் தளத்தில் மெளசை வலது கிளிக் செய்தால் இறுதியில் புதிதாக இரண்டு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கும்.                                              யூ ட்யூப் தளத்தில் எந்த வீடியோவை சினிமா ஸ்டைலில் பார்க்க வேண்டுமோ அந்த வலைப் பக்கத்தில் மெளசை வலது கிளிக் செய்து 'Play in Cinema' என்பதை கிளிக் செய்யவும்.                                     
இப்பொழுது வீடியோவானது மற்றொரு டேபில் ஏறக்குறைய முழுத் திரையில் திறக்கும். இன்னும் சில மாறுதல்களை செய்வதன் மூலம், வீடியோவை இன்னும் தெளிவாக்கலாம். திரையின் வலது மேல் புற மூலையில் நிறங்களை தேர்ந்தெடுத்து பேக்கிரவுண்ட் நிறத்தை மாற்றலாம். வலது கீழ்ப்புற மூலையில் தரப்பட்டுள்ள வசதிகளை உபயோகித்து வீடியோ திரையின் அளவை மாற்றலாம்.


                                                    

இந்த நீட்சியை நிறுவி வீடியோவை தெளிவாக பார்த்து ரசியுங்கள்.பதிவு பிடித்திருந்தால்  சமுக வலைதளங்களிலும்  திரட்டிகளிலும் பகிர்ந்து  கொள்ளுங்கள்.