நம்ம கூகுளிடம் ஒரு விளையாட்டு(PLAY WITH GOOGLE)

கூகிள் நமக்கு அளிக்கும் வசதிகள் அனைத்தையும் பெறுவதற்கு நமக்கு அவசியம் தேவை ஒரு ஜிமெயில் என்பதை அறிவோம்.தற்போது ஜிமெயில் பதிவுசெய்யும்போது மொபைல் எண் வெரிஃபிகேசன் செய்ய வேண்டிய நிலை உள்ளது.நம் மொபைல் எண்ணை வைத்து நம் ஜாதகத்தையே கூகிள் கணித்து விடும்(தேவைப்படும் பட்சத்தில்) .அதேசமயம் மொபைல் வெரிஃபிகெசன் செய்வது மிகவும் பாதுகாப்பானது. நம் கணக்கை யாராவது களவாடிவிட்டால் நமக்கு மிகவும் பயணளிக்கும் என்பதையும் அறிவோம்.
ஆனாலும் நமது பிரைவேசியில் கூகிள் தலையிடுவது பலருக்கும் பிடிக்காது.அதோடு சிலருக்கு மண உளைச்சலும் இருக்கலாம். வெகு சிலரிடம் மொபைல் எண் இல்லாமல் கூட இருக்கலாம்.இப்படிப்பட்ட சூழலில் மொபைல் எண் வெரிஃபிகேசனை எப்படி ஏமாற்றுவது என்று பார்ப்போம்.

1.தற்போது ஏராளமான வலைத்தலங்கள் இணையத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பவும்,வாய்ஸ் மெயில் அனுப்பவும் கூடவே ஒரு மொபைல் எண்ணும் கொடுக்கின்றன.

அப்படிப்பட்ட சில தலங்கள்
http://receive-sms-online.com/
http://k7.net/

மேலே உள்ள தளங்கள் அல்லது இதுபோல் சேவையளிக்கும் உங்களுக்கு தெரிந்த தளங்களுக்கு செல்லுங்கள்.

2.பதிவு செய்ய வேண்டி இருந்தால் பதிவு செய்து ஒரு எண்ணை பெற்றுக்கொள்ளுங்கள்.

3.பிறகு ஜிமெயில் உருவாக்குங்கள்.அதில் மேலே உள்ள தளங்கள் கொடுத்த எண்ணை வெரிஃபிகேசனுக்காக கொடுங்கள்.

4.மீண்டும் நீங்கள் மொபைல் எண் பெற்ற தளத்திற்கு சென்று பாருங்கள்.கூகிள் வெரிஃபிகேசன் கோட்கள் இருக்கும்.அதை அப்படியே ஜிமெயில் வெரிஃபிகேசனுக்காக கொடுத்து ஜிமெயிலையும் கூகிளையும் ஏமாற்றுங்கள்.

தெரிந்துகொள்வதற்காக மட்டுமே இந்த பதிவு போடப்பட்டுள்ளது.மற்றபடி உங்கள் உண்மையான மொபைல் எண்ணை கொடுத்து ஜிமெயிலில் பதிவு செய்வதே பிற்காலத்திலும் பயன்படக்கூடியதாக இருக்கும். என்னுடைய பரிந்துரையும் அதுவே.!!!
நன்றி மீண்டும் சந்திப்போம்.
நம்ம கூகுளிடம் ஒரு விளையாட்டு(PLAY WITH GOOGLE) நம்ம கூகுளிடம் ஒரு விளையாட்டு(PLAY WITH GOOGLE) Reviewed by அன்பை தேடி அன்பு on 9:31 PM Rating: 5
Powered by Blogger.