Responsive Ad

உங்க Blog இன் subscriber ரை அதிகரிக்க செய்ய 10 வழிமுறைகள்

Blog குகளின் subscribers குறைவதற்கான வழிமுறைகளை கொஞ்சம் ரிசேர்ச் பண்ணிப்பாக்கலாம் என நினைத்துக்கொண்டு கூகிளாண்டவரிடத்திற்குப்போனா, அட நம்மள மாதிரி நிறய பேரு இப்படியே ரிசேர்ச்சு பண்ணி வச்சுருந்தாங்க. பாவம். அவங்களுக்கும்… ம்ம் வேணாம். இப்படி அதிகமா அலட்டினாலும் வர்றவங்க நின்னுடுவாங்களாம். எல்லா முடிவுகளிலிருந்தும்  ஒரு 10ஐ செலக்ட் பண்ணிருக்கேன். நீங்களும் பாத்துட்டு ஏதாச்சும் சொல்லிட்டுப்போங்க.

1.அளவுக்குஅதிகமான Posts களை போடுவது. – வாசகர்கள் கடைசியாக போட்ட பதிவுகளைத்தான் அதிகம் படிப்பதாக சொல்கிறார்கள். ஒரு நாளுக்கு அதிகபட்சம் 2 பதிவுகள் போடலாம். ஆனால் ரெகுலர் வாசகர்கள் எத்தன போட்டாலும் படிப்பார்கள். ஆக உங்க ஒவ்வொரு பதிவையும் எல்லாரும் படிக்கணும்னா ஒரு நாளுக்கு ஒண்ணோட நிறுத்திரணுமாம்.

2. தொடர்ச்சியான இடைவெளியில் post போடாமை -அதாவது எப்பவாவது இருந்துட்டு போடரது, மாசத்துக்கொண்ணுனா அப்படியே மெயின்டேன் பண்ணணும். வாரத்துக்கொண்ணுணா அப்படியே, தினமும்னாலும் அப்படியே தொடர்ந்து பண்ணணுமாம்.

3. Blog இனுடைய மைய நோக்கத்தை விட்டு வேறு பதிவு போடுவது ( அதாவது நான் தொழில்நுட்ப பதிவு போடபோறன்னு அலப்பற விட்டுட்டு மொக்கை பதிவு போடர மாதிரி )

4. நமது பதிவுகளை நாமே மறுபதிவு செய்வது, ( சுயசுடுதல் ) – மீள்பதிவின்போது புதிய விடயங்களிருந்தால் அவற்றை மட்டும் அப்டேட் பண்ணிவிட்டு பழைய பதிவிற்கு லிங்க் குடுப்பதுதான் அதிக வாசகர்களையும் ரேட்டிங்கையும் கூட்டுமாம். ஏனெனில் பழைய பதிவுகளுக்கு ஹிட்ஸ் வந்தா ரேட்டிங் அதிகமாகும்.(கூகுளுக்கு மட்டும்)

5. சுவாரசியமில்லாத கருத்து அல்லது தகவல். – இத  படிக்கும்போது மானிட்டரில் ஈ வந்து நிக்குமாம். ( இந்த பதிவுக்கும் நிக்குதா? முதல்ல ஃபேன போட்டு வாங்க !!! )

6. தலைப்பிற்கு சம்பந்தமில்லாத பதிவு – சோடானு சொல்லி கூப்பிட்டு ஓடி வாறவரனுக்கு பச்ச தண்ணிய குடுத்தா, இன்னாரு நாள் நாம உண்மையா சோடா குடுதடதாலும் ஏன்னும் பாக்க மாட்டானுக.நகைச்சுவை மற்றும் மொக்கைப்பதிவுகளுக்கு இது விதிவிலக்கு. ஆனால் உங்கள் ஸ்டைல் தெரியாத புது ஆளாயிருந்தா அவருக்கு உங்க பதிவு பற்றி நெகடிவான எண்ணம்தான் வரும்

7. ஈகோ – வாசிப்பவரை ஒண்ணுமே தெரியாதவராக மட்டம் தட்டறது அல்லது தனக்கு மட்டுமே தெரியும்கறமாதிரி அலப்பற விடுறது. வாசிக்கும் போது ஒவ்வாரு வாசகருக்கும் அந்த பதிவு தனக்காகவே எழுத்ப்பட்டு சொல்ல வரும் செய்தியை தாழ்மையுடன்  சொல்ற மாதிரி இருக்கணுமாம்.

8. தரம் குறைந்த ஆக்கங்கள் – ரெஸ்டோரண்ட ஸ்டைலா வச்சு விளம்பரப்படுத்தி உள்ள பச்சத்தண்ணி மாதிரி இருந்தா இறால் கறிய ஹாஃப் ரேட்ல குடுத்தாலும் அடுத்த தரம் திரும்பிகூட வரமாட்டாங்க

9. மிகமிக நீளமான பதிவுகள். – படமில்லாம மிக நீளமாக பதிவு போடரது. நீளமாயிருந்தா பார்ட் பார்ட்டாக பிரிச்சு பொடலாம். இல்லேனா பொருத்தமான சுவாரசியமான படங்களை ஆங்காங்கே போட்டுவிடலாம். சின்ன சின்ன பத்திகளாக பிரிச்சு விடலாமாம்.

10. அதிகமான பின்னுட்டங்கள் – ஒரு பக்கத்தில் 50 பின்னுட்டங்கள் வரை இருந்தா ஓகே. அதிக பின்னுட்டங்களை பேஜ் பேஜாக வார மாதிரி அடுக்கி விடுங்க. புதிய பதிவுகளுக்கு சும்மா விட்டா பரவால்ல. ஒரு மாசமான பழைய பதிவுகளை இப்படி பண்ணிவிடுங்க.

ஹம்ம். இதுல நீங்க ஒத்துக்கற ஒத்துக்காத விடயங்களையும் சொல்லுங்க.
தெடர்ந்த வாசிக்கற ஒரு பிளாக்கிலிருந்து நீங்க வெறுத்துபோய் வாசிக்கறத விடுறீங்கனா என்னென்ன காரணங்களுக்காக என்னதையும் அறியத்தரவும்.