blog
பாடம்-4 blogger பதிவுகளை பாதுகாப்பது எப்படி?
DASHBOARD
SETTINGS
BASIC
BASIC என்பதன் கீழ் முதலில் BLOG TOOLS என்பது காணப்படும். அதில் IMPORT BLOG, EXPORT BLOG, DELETE BLOG என்று மூன்று பிரிவுகள் காணப்படும்

1)உங்கள் பதிவுகளை சேமிக்க முதலில் EXPORT BLOG என்பதனை தேர்வு செய்து உங்கள் பதிவுகளை xml கோப்பாக தரவிறக்கி உங்கள் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் உங்கள் அனைத்து பதிவுகளும் இருக்கும். உங்கள் வலைப்பதிவு முடக்கப்பட்டால் இந்த கோப்பை பயன்படுத்தி நீங்கள் உங்கள் பதிவை மீட்டெடுக்க முடியும்.

2)உங்கள் வலைப்பதிவு முடக்கப்பட்டுவிட்டது எனில் நீங்கள் ஒரு புதிய வலைப்பதிவை உருவாக்கி அதில் IMPORT BLOG என்பதனை தேர்வு செய்து நீங்கள் சேமித்த கோப்பை மீண்டும் தரவேற்றி உங்கள் பதிவுகளை புதிய வலைப்பதிவில் கொண்டுவரலாம்.

நீங்கள் இரு வலைப்பதிவுகளில் நடத்திவந்தால் ஒரு வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளையும் இன்னொரு வலைப்பதிவில் கொண்டுவர இதே முறையை பயன்படுத்தலாம்.