போன பாடத்தில் உங்கள் வலைப்பதிவை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். வலைப்பதிவை உருவாக்கியபின் நீங்கள் ஒவ்வொரு முறையும் பிளாக்கர் தளத்தில் நுழையும்போது முதலில் தோன்றுவது DASHBOARD. அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இந்தப் பாடத்தில் பார்க்கலாம்.


Dashboardல் உங்களுக்குச் சொந்தமான அனைத்து வலைப்பதிவுகளை காணப்படும். நீங்கள் இங்கிருந்தபடியே உங்கள் பிளாக்கர் கணக்கின் மூலம் எத்தனை வலைப்பதிவுகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம். அதற்கு நீங்கள் create a blog எனபதனை தேர்வு செய்யவேண்டும்.


அதன் பிறகு வழக்கம் போல் உங்கள் வலைப்பதிவு தலைப்பு மற்றும் முகவரி கொடுத்து பின்னர் டெம்ப்லேட் தேர்வு செய்து உங்கள் வலைப்பதிவை உருவாக்கிக் கொள்ளலாம்.


Manage Blogs என்பதின் கீழ் உங்கள் வலைப்பக்கங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும். நீங்கள் கடைசியாக பதிவிட்ட வலைப்பதிவு முதலில் தோன்றும். ஒவ்வொரு வலைப்பதிவின் கீழும் NEW POST, EDIT POSTS, SETTINGS, DESIGN, MONETIZE போன்ற டேப்கள் இருக்கும்.1) New post:
பிளாக்கரில் மிக முக்கியமான டேப் New post. இதன் மூலமே நீங்கள் உங்கள் வலைப்பதிவில் புதிய பதிவுகளை உருவாக்கி வெளியிட வேண்டும். New post என்பதனை அழுத்தினால் வோர்ட் பேட் போன்ற ஒரு விண்டோ தோன்றும். அதன் மூலம் நீங்கள் புதிய பதிவுகளை உருவாக்கி வெளியிடவேண்டும்.


இதன் அனைத்து அம்சங்களை பற்றியும் உங்கள் பதிவை எப்படி வெளியிடுவது என்பது பற்றியும் அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.


2)Edit posts:
நீங்கள் வெளியிட்ட பதிவுகளில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது மாற்றம் செய்ய விரும்பினாலோ நீங்கள் edit postsஐ தேர்வு செய்து மாற்றங்களை செய்து பதிவை வெளியிடலாம்.


3)Settings:
Settings மூலம் நீங்கள் உங்கள் வலைப்பதிவை பராமரிக்கவும், பாதுகாக்கவும் முடியும். இதிலும் ஏராளமான டேப்கள் உள்ளதால் இதனைப் பற்றியும் அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


4)Design:
இதன் மூலம் உங்கள் வலைப்பதிவின் தோற்றத்தை மாற்றி அழகாக்க முடியும். உங்களுக்குத் தேவையான படி html கோடிங்குகளை மாற்றி அமைத்து உங்கள் வலைப்பதிவை படிப்பவர்களுக்கு வசதியாக ஆக்க முடியும்.


5)Monetize:
Monetize என்பது கூகுள் Adsense மூலம் உங்கள வலைப்பதிவில் இருந்து பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் நீங்கள் தமிழ் வலைப்பதிவை உருவாக்கப்போகிறீர்கள் என்றால் Adsense பெறுவது கடினம்.


இந்தப் பதிவு நீண்டுகொண்டே இருப்பதால் New post, Settings, Design பற்றி தனித்தனியாக அடுத்துவரும் பதிவில் காணலாம். மற்றபடி Monetize மூலம் நீங்கள் நினைப்பதுபோல் சம்பாதிக்க முடியாது என்பது எனது எண்ணம். சரி அடுத்த பாடத்தில் சந்திப்போம்.
.