ஹார்ட்டிஸ்க் (hard disk)இட பற்றாகுறை - பெரிய கோப்புகளை கண்டறிய

கணினி வாங்கும் பொழுது நீங்கள் போதுமான கொள்ளளவு கொண்ட ஹார்ட்டிஸ்க் வாங்கி இருப்போம். பெரும்பாலானோர் வீடியோ , மென்பொருள்களை தரவிறக்கி உபயோகித்து விட்டு அவற்றை அளிக்க மறந்து இருப்போம். நாளடைவில் பாடல்கள், வீடியோ கோப்புகள், மென்பொருள்கள் என்று பெரிய கோப்புகளால் ஹார்ட்டிஸ்க் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும்.

அதிக இடம் எடுத்து கொண்டுள்ள கோப்புகள் எங்கு சேமித்து வைத்தோம் என்று மறந்து இருப்போம். அந்நேரங்களில் உங்கள் கணினியும் வேலை செய்ய திணறும். "Low Disk Space" என்று எச்சரிக்கை செய்தி தரும்.


இத்தருணங்களில் கணினியில் தேங்கி உள்ள கோப்புகளை தேடி கண்டுபிடித்து அளிக்க வேண்டும்.ஹார்ட்டிஸ்கில் எங்கு பெரிய அளவு கொண்ட கோப்புகள் இருக்கின்றன என்பதை கண்டறிவது கடினமான விஷயம். இந்த பெரிய கோப்புகளை அழித்தாலே பெரும்பாலான இடத்தை காலியாக வைத்து கொள்ளலாம்.

இதனை செய்ய Primitive File Size Chart என்ற இலவச மென்பொருள் உதவுகிறது. இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். இதனை இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை. தரவிறக்கிய கோப்பை திறந்தாலே போதுமானது.


இது விண்டோஸ் 2000/2003/XP/Vista/7 இயங்குதளங்களில் இயங்கும். இதன்
மூலம் நீங்கள் பெரிய கோப்புகளை , அவை உள்ள போல்டர்களை கண்டறியலாம். பின்பு அந்த போல்டர்களுக்கு சென்று அந்த கோப்புகளை அழித்து கணினியின் ஹார்ட்டிஸ்க் இடத்தை மிச்சப்படுத்தி கொள்ளுங்கள்.
ஹார்ட்டிஸ்க் (hard disk)இட பற்றாகுறை - பெரிய கோப்புகளை கண்டறிய ஹார்ட்டிஸ்க் (hard disk)இட பற்றாகுறை - பெரிய கோப்புகளை கண்டறிய Reviewed by ANBUTHIL on 2:42 PM Rating: 5
Powered by Blogger.