சீதனம் கேட்கும் மாப்பிள்ளைகளை பெண்கள் அடித்து உதைக்கும் வீடியோ கேம்!!


இந்தியாவில் நிலவிவரும் சீதனப் பிரச்சினையை பிரதான கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ கேம் ஒன்று அதிக பிரபலமாகியுள்ளது.

'எங்ரி பிறைட்ஸ்' (கோபமான மணப்பெண்கள்) எனும்  பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ கேம் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமண இணைய சேவையான சாடி.கொம் இணையத்தளத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இவ்வீடியோ விளையாட்டு, இணையத்தளம்  மூலம் இதுவரை 270,000 இற்கும் மேற்பட்டவர்களினால் பார்வையிடப்பட்டுள்ளது.


இவ்வீடியோவில் மணப்பெண்கள் பலர் இணைந்து செங்கற்கள், வாள், தும்புத்தடி போன்றவற்றைக் கொண்டு சீதனம் கோரும் மாப்பிள்ளைகளை அடிக்கும் காட்சிகள் உள்ளன.

பொறியியலாளர், வைத்தியர் மற்றும் விமானி ஆகிய மூன்று மாப்பிள்ளைகள் 1.5 மில்லியன் ரூபா முதல் சீதனம் கேட்பதையும் அதன்பின் அடிவாங்குவதையும் சித்திரிக்கும் காட்சிகள் இதில் உள்ளன.
                                                 தரவிறக்க சுட்டி
சீதனம் கேட்கும் மாப்பிள்ளைகளை பெண்கள் அடித்து உதைக்கும் வீடியோ கேம்!! சீதனம் கேட்கும் மாப்பிள்ளைகளை பெண்கள் அடித்து உதைக்கும் வீடியோ கேம்!! Reviewed by ANBUTHIL on 8:06 PM Rating: 5
Powered by Blogger.