பெரும்பாலும் ஆடியோ பைல்கள் MP3 வடிவிலேயே தற்போது அனைவராலும் உபயோகப் படுத்தப் படுகிறது. நம்மிடம் சில MP3 ஆடியோ பைல்கள் தரம் குறைந்து இருக்கும் அந்த வகை பைலை இயக்கும் போது சத்தம் குறைவாக கேட்பதுடன் கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி (சற்று தொங்கலாக) இருக்கும்.

பழைய சினிமா பாடல்களை கூட ஸ்டீரியோ இசையுடன் மாற்றி கேட்டு மகிழலாம். மற்றும் நமக்கு தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்.

முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
தற்பொழுது உங்களுக்கு வரும் Zip பைலை Extract செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது வரும் MP3 Quality Modifier என்ற பைலை ஓபன் செய்து கொள்ளவும்.
இந்த மென்பொருளை நாம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.

குறிப்பிட்டு காட்டியுள்ள பகுதியில் உங்கள் விருப்பம் போல மாற்றம் செய்ய வேண்டிய பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்த கொண்டவுடன் கீழே உள்ள வசதிகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொண்டு மேலே உள்ள Process என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய MP3 பைல் புதிய தரத்துடன் உருவாகும்.

கடைசியில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

இது போன்று உங்களுக்கு வரும் விண்டோவில் உங்களின் பழைய பைலின் அளவும் மாற்றம் செய்த பைலின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி