இனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்!


இந்திய இசை ரசிகர்களுக்காக GOOGLE புதிய இசைக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், பல்வேறு தேடல்களை எளிதாக்கியகூகுல் இந்த முறை நீங்கள் விரும்பும் பாடல்களை எளிதாக தேடி கேட்டு மகிழ இசைக்கென தனியாக ஒரு தேடல் பொறியை வழங்குகிறது. தற்சமயம் இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு மகிழலாம். in.com,Saavnமற்றும் Saregama ஆகிய தளங்களுடன் இணைந்து இந்த சேவையினை வழங்குகிறது.1970 களில் வந்த திரைப்படங்களில் இருந்து இப்போதைய நண்பன் பாடல்கள் வரை உள்ளது.


இதற்கான காப்புரிமையின தனிப்பட்ட முறையிலும், பங்குதாரர்களின் மூலமாகவும் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பெற்றுள்ளது. கூடுதலான  சேவைகளை இன்னும் வழங்கவில்லை.. எனினும் எல்லாத்துறைகளிலும் கலக்கும் கூகுல் மேலதிகமாக புதுமைகளை இதிலும் அறிமுகப்படுத்தும் என நம்புவோமாக.
இணையதள முகவரி: http://www.google.co.in/music/

இனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்! இனிமேல் சினிமாப் பாடல்களை GOOGLE வழியாகவே கேட்டு மகிழலாம்! Reviewed by ANBUTHIL on 8:30 PM Rating: 5
Powered by Blogger.