நாம் முகநூலிலே பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து பேச  விரும்பினால், இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் முகநூலில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை முகநூலில் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது? இதற்கு ஸ்கைப்பிலே வசதி உள்ளது.
நீங்கள் செய்யவேண்டியது, ஸ்கைபிலே சென்று contacts >import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் கீழ் குறித்த படத்தில் உள்ளவாறு தோன்றும்.

இதிலே, உங்கள் முகநூலின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள். சற்று நேரத்திலே உங்கள் முகநூலில் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும். (முகநூலுக்கும், ஸ்கைபுக்கும் ஒரே மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துபவர்களது விபரங்கள் (ஸ்கைப் முகவரி) மட்டுமே வெளிக்காட்டும்.)
ஸ்கைபிலே இந்த வசதி இருப்பது அநேகருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், இப்படி ஒரு வசதி இருக்கு என்பதை இது வரை அறியாதவர்களும் இருப்பார்கள்.