திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்து கொள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
பின் இதனை ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோவில் இதில் உள்ள Add Photo மூலம் புகைப்படங்களை தெரிவு செய்யவும்.
பின்னர் இரண்டாவதாக உள்ள Theme -ல் தேவையான  வடிவத்தை தெரிவு செய்யவும். பின்னர் உங்களுக்கு தேவையான பாடலை நிகழ்ச்சிக்கு ஏற்ப சேர்க்கவும்.

தேவையான தலைப்பை சேர்த்துகொள்ளவும். உங்களுக்கு வீடியோ எந்த போர்மட்டுக்கு வேண்டுமோ அதனை தெரிவு செய்து கொள்ளவும். சேமிக்கும் இடத்தையும் தெரிவு செய்து கொள்ளவும். இப்போது சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ கிடைக்கும்.