உங்களிடம் இணைய வசதியற்ற மிகப் பழைய கைத்தொலைபேசி இருக்கின்றதா?
கவலையை விடுங்கள் இனிமேல் அவற்றிலும் உங்கள் பேஸ்புக் கணக்கை லாகின் செய்யலாம். பேஸ்புக் இந்தியா இதற்கான வசதியை உருவாக்கியுள்ளது. 


இவற்றை செயற்படுத்த உங்கள் கைத்தொலைபேசியிலிருந்து *325# என டைப் செய்து டயல் செய்துவிட வேண்டும். அல்லது *fbk#  என்று டயல் செய்ய வேண்டும்.

இதற்கென உங்கள் தொலைபேசியில் இணைய உலாவி மற்றும் டேட்டா பிளான் போன்றவை இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. முதலில் *325# என டயல் செய்யுங்கள் பின்னர் பேஸ்புக் கணக்கின் யூசர் நேம் பாஸ்வேர்ட்டை தந்து லாகின் செய்தல் வேண்டும்.

அதன் பின்னர் இலக்கங்களின் அடிப்படையில் பேஸ்புக்கை கையாள முடியும். சாட்டிங்க் , புதிய நண்பர்களை அனுமதித்தல், மற்றும் ஏனையவற்றையும் செய்யலாம்.

இதற்காக ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கட்டணம் அறவிடப்படுகின்றது. மேலும் Airtel, Aircel, Idea ,Tata Docomo போன்றவை இச்சேவையை வழங்குகின்றன.