குழந்தைகளுக்கென தனியே ஒரு தளம்குழந்தைகள் என்றாலே நமக்கு கொள்ளை ஆசைதான். முதலில் நம் குழந்தைகளை அன்போடு எதிர்பார்ப்புகளுடன் வளர்த்து ஆளாக்குகிறோம். பின் அவர்களின் குழந்தைகளை, பேரக் குழந்தைகளை வளர்க்கத் தொடங்குகிறோம். இவர்களின் ஒவ்வொரு நிகழ்வையும் போட்டோக்கள் எடுத்து ஆல்பங்களாக அமைத்து காட்டி மகிழ்கிறோம். குழந்தைகள் வளர்ந்த பின் அவர்களுக்குக் காட்டி நீங்கள் இப்படித்தான் வளர்ந்தீர்கள் என்று காட்டுகிறோம். நம் அன்பை அவர்கள் புரிந்து கொள்ள இதுவும் ஒரு கருவியாக அமைகிறது. இதே போட்டோக்களை, சிறிய வீடியோ காட்சிகளை இணையத்தில் அமைத்து குழந்தைகளும் உறவினர்களும் எப்போதும் காணும் வகையில் அமைத்தால் என்ன!

நாம் தனியாக இணையப் பக்கங்களை ஒவ்வொருவரும் அமைக்க முடியாது. இந்த நோக்கத்திற்காகவே நமக்கு இலவசமாக இணையப் பக்கங்களை அமைத்துத் தருகிறது www.totspot.com   என்ற முகவரியில் உள்ள இணைய தளம். இதில் நம் குழந்தைகளில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் அவர்கள் சாதனை நிகழ்வுகளையும் பதித்து அவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் காணும்படி அமைக்கலாம். இந்த தளம் சென்று முதலில் நமக்கென்று ஒரு அக்கவுண்ட் திறக்க வேண்டும். இதற்கென நாம் வைத்துள்ள இமெயில் அக்கவுண்ட்டினை இந்த தளம் கேட்கும். பின் அந்த தளத்திற்கு ஒரு மெயில் அனுப்பி நம் விருப்பத்தினை உறுதிப்படுத்தும். பின் நமக்கென ஒரு தளம் திறக்கப்படும். அதன்பின் மீண்டும் இந்த தளத்தில் நுழைந்து நம் பெயரில் லாக் இன் செய்து போட்டோக்களை அமைக்கலாம். இவற்றை எல்லாரும் பார்க்க முடியாது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்க அவர்களுக்கான அக்கவுண்ட்டை உருவாக்கி போட்டோக்களைக் காணுமாறு செய்திடலாம். வருங்காலத்தில் குழந்தைகள் இவற்றைப் பார்வையிடும்போது நிச்சயம் நம் அன்பைப் புரிந்து கொண்டு அதனை அவர்களின் குழந்தைகளிடமும் காட்டுவார்கள் அல்லவா!
குழந்தைகளுக்கென தனியே ஒரு தளம் குழந்தைகளுக்கென தனியே ஒரு தளம் Reviewed by ANBUTHIL on 10:41 PM Rating: 5
Powered by Blogger.