கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்தது தான் இலேசான இளம் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணம் கலந்த புகைப்படங்கள்.
அந்த காலத்து புகைப்படங்கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லும். நாம் இப்போது எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்றலாம்.
தொழில்நுட்ப மாற்றங்கள் நாளும் பெருகி வரும் வேலையில் ஓன்லைன் மூலம் சில நொடிகளில் பல வித்தைகள் செய்யலாம். அந்த வகையில் எந்த மென்பொருள் துணையும் இன்றி ஓன்லைன் மூலம் நம் புகைப்படங்களை பழையாகாலத்தில் எடுத்த புகைப்படம் போல் மாற்றலாம் நமக்கு உதவ ஒரு தளம் இருக்கிறது.

இத்தளத்திற்கு சென்றவுடன் Choose File என்ற பொத்தானை சொடுக்கி நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்பதை சொடுக்கி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்து பதிவேற்றம் செய்த புகைப்படம் பழைய காலத்து புகைப்படமாக மாற்றப்பட்டிருக்கும்.
மாற்றப்பட்ட இந்த புகைப்படதின் மேல் Right Click செய்து Save image as என்பதை சொடுக்கி நம் கணணியில் சேமித்தும் வைக்கலாம்.