போட்டிகள் வைத்து பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் இணையம்

வேலை கொடுப்பவர்களுக்கு நாளும் வரும் வேலையை கூட ஒரு போட்டி போல் வைத்து தினமும் பலவகையான போட்டி நடத்தி ஒவ்வொரு போட்டிக்கும் அதற்கு இணையான பரிசினை வெற்றி பெறுபவர்களுக்கு கொடுக்க ஒரு தளம் உள்ளது.
உழைக்காமல் பணம் வேண்டாம், எங்கே போட்டி நடக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள் நாங்களும் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்று சொல்லும் அனைவருக்கும் போட்டிகளை வைத்து பரிசுகளை அள்ளிக் கொடுப்பதற்கென்றே ஒரு தளம் இருக்கிறது.

வீட்டில் இருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி?, ஓன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வழிமுறை என்ன?, ஓன்லைன் மூலம் வேலை செய்வது எப்படி?, இணையம் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி? இன்னும் நம்மவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு இந்த தளம் பதிலாக இருக்கும்.
இத்தளத்திற்கு சென்று நாம் நம்முடைய பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையலாம், இணையப் பயனாளர்கள் பலபேர் தங்களுக்கு செய்ய வேண்டிய வேலை மற்றும் பணம், எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கொடுத்துள்ளனர், தினமும் பலவகையான பிராஜெக்ட் இங்கு கிடைக்கிறது, இதில் நாம் எதில் திறமைசாலியாக இருக்கிறோமோ அதில் விருப்பத்துடன் பங்கு பெறலாம்.
பல பேர் பங்கு பெறுவதில் போட்டி கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனால் வெற்றி பெற்றால் பணத்தை குவிக்கலாம். குறிப்பிட்ட விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் மாதம் இவ்வளவு பணம் என்று ஏமாற்றும் கும்பலிடம் இருந்து தப்பிக்கலாம்.
உதாரணமாக இந்ததளத்தில் இருந்து ஒருவர் தன் நிறுவனத்திற்கு லோகோ வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், நாமும் பங்கு கொண்டு வெற்றி பெற்றால் பணமும் கிடைக்கும், உங்கள் திறமை அவருக்கு பிடித்திருந்தால் அந்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.
போட்டிகள் வைத்து பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் இணையம் போட்டிகள் வைத்து பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் இணையம் Reviewed by ANBUTHIL on 2:20 PM Rating: 5
Powered by Blogger.