இணையத்தில் வேகமாக உலாவ பயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு


பயர்பாக்ஸ் பதிப்பு 7 வெளியான சில நாட்களிலேயே, பதிப்பு 8ன் சோதனைத் தொகுப்பினை மொஸில்லா வெளியிட் டுள்ளது. இதில் சில புதிய வசதிகளும், ஏற்கனவே தரப்பட்டுள்ள சிலவற்றின் மேம்படுத்தல்களும் தரப்பட்டுள்ளன. பிரவுசரின் டூல்பாரில் தரப்பட்டுள்ள தேடல் இஞ்சின்களில் ட்விட்டர் சேர்க்கப் பட்டுள்ளது. 
மொஸில்லா தளத்தில் தரப்படுத்தப் பட்டு இல்லாத ஆட் ஆன் தொகுப்புகளை முதன் முதலாகப் பயன்படுத்துகையில் இப்போது எச்சரிக்கை தரப்படுகிறது. டேப்களைக் கையாள்வதில் புதிய வழிமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. பிரவுசர் இயக்கத்தினைத் தொடங்கு கையில், நாம் தேர்ந்தெடுத்த டேப்களுக்கான தளங்கள் மட்டுமே தயார் நிலையில் வைக்கப்படும். 
இதனால், பிரவுசர் மூடப்படுகையில் பல டேப்களை சேவ் செய்து வைத்திருந்தாலும், மீண்டும் திறக்கப்படுகையில், அது இயக்க நிலைக்கு வரும் நேரம் கணிசமாகக் குறையும்.
இணைய தளம் உருவாக்கு பவர்களுக்கு இந்த பதிப்பில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. 
இனி புதிய பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு வருமுன், அது மூன்று நிலைகளில் இயக்கப்படும். முதல் ஆறு வாரங்களுக்கு அது “Aurora” என்ற நிலையில் வைக்கப்படும். பின்னர் அதன் சோதனை பதிப்பு (Beta) கிடைக்கும். அடுத்த ஆறு வாரத்தில் அதன் முழுமையான புதிய பதிப்பு தரப்படும். பதிப்பு 8 நவம்பர் 8ல், வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
சுட்டி   ; இதோ

இணையத்தில் வேகமாக உலாவ பயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு இணையத்தில் வேகமாக உலாவ  பயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு Reviewed by ANBUTHIL on 6:55 PM Rating: 5
Powered by Blogger.