நாம் பயன்படுத்தும் செல்போனில் நெறைய வசதிகளை பயன்படுத்தி வருவோம். அதில் முக்கியமான வசதி " Block list Calls " மற்றும் " Block list SMS"  என்ற வசதியாகும். இந்த வசதியின் மூலம் நமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுத்து விடமுடியும். இந்த இரண்டு வசதிகளையும் தனி தனி அப்ளிகேசன் மூலமாக தான் பயன் படுத்த முடியும் . 


ஆனால் இப்போது புதிதாக " Killer Mobile  சாப்ட்வேர் " மூலமாக இந்த இரண்டையும் ஒரே அப்ளிகேசனில் நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த புதிய அப்ளிகேசனின் பெயர் " Blackballer " என்பதாகும்.

  
இந்த அப்ளிகேசனின் சிறப்புகள் : 
  • நமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.
  • அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, கால் வராமல் தடுக்கலாம்.
  • அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, எஸ் எம் எஸ் வராமல் தடுக்கலாம்.
  • குருப் உருவாக்கி,தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.
  • ஸ்பாம் நம்பர்ஸ் அப்டேட்ஸ் செய்து கொள்ளலாம்.
  • பாஸ் வோர்ட் வசதி செய்து கொள்ளலாம்.
  • அணைத்து வகை மொபைல் களுக்கும் பயன்படக் கூடியது .( Nokia,Windows Mobile ,Android and Blackberry )
இதில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ள ஒரு வசதி ஸ்பாம் நம்பர்ஸ் அப்டேட்ஸ் வசதியாகும். நாம் எப்போது வேண்டுமானாலும் நமது நாட்டின் ஸ்பாம் நம்பர் களை அப்டேட்ஸ் செய்து நமது மொபைலுக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.

இந்த அப்ளிகேசன் " Lite version " மற்றும் " Paid version " என்ற இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. நம் அனைவருக்கும் பயன்படக்கூடிய இந்த அப்ளிகேஷனை இங்கு சென்று டவுன்லோட் செய்யவும்.