பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி SMART FRIEND LIST


உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு செய்தியையோ அல்லது நிகழ்ச்சியையோ அல்லது அனுபவத்தையோ மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் பயனளிப்பது சமூக தளங்கள்.
சமூக தளங்களில் நாம் பகிரும் தகவல்கள் நண்பர்கள் அனைவருக்கும் அப்டேட்ஸ் செய்தி செல்கிறது. அதன் மூலம் நண்பர்கள் நம் தகவலை பார்க்க முடிகிறது.
ஆனால் சமூக தளங்களில் நம் நண்பர்கள் மட்டுமின்றி உறவினர்கள், தோழிகள் இப்படி பல தரப்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். இதில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டும் செய்தியை அனுப்ப பேஸ்புக்கில் மிகுந்த சிரமம் எடுத்து அனுப்ப வேண்டும்.

ஆனால் கூகுள் பிளசிலோ இது மிகவும் சுலபம் தேவையானவருக்குக்கு ஒருவருக்கு மட்டும் கூட செய்தியை அனுப்பலாம். இதனை கருத்தில் கொண்டு பேஸ்புக் தளமும் இப்பொழுது புதிய வகை friend List வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.
இதற்கு முதலில் இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்கள் நண்பர்கள் பட்டியல் இருக்கும்.
இதில் ஒவ்வொரு நண்பருக்கு நேராகவும் Friends என்ற பட்டன் இருக்கும் அதில் கர்சரை வைத்தால் உங்களுக்கு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் அந்த நண்பர் எந்த வகை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்யவும்.
நீங்கள் நினைக்கும் பிரிவு அந்த லிஸ்டில் இல்லை என்றால் New List என்பதை அழுத்தி புதிய பிரிவை உருவாக்கி தேர்வு செய்து கொள்ளவும்.
நீங்கள் ஒவ்வொரு நண்பர்களையும் தேர்வு செய்தால் அந்த நண்பர்க்கு நேராக உள்ள பட்டனில் கர்சரை வைத்தால் அவர் உள்ள பிரிவை பார்க்கலாம்.
இது போல அனைவரையும் வெவ்வேறு பிரிவில் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் wall பகுதிக்கு செல்லுங்கள். அங்கு நீங்கள் பகிர வேண்டிய தகவல் கொடுத்த பின்னர் Post பட்டனுக்கு அருகில் ஒரு பட்டன் Public or Friends என இருக்கும் அதில் கிளிக் செய்யவும்.
அதில் தகவல் பகிர வேண்டிய குறிப்பிட்ட ஒரு பிரிவை தேர்வு செய்து விட்டு Post பட்டனை அழுத்தினால் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் அந்த அப்டேட்ஸ் செல்லும் மற்ற நண்பர்களுக்கு செல்லாது.
குறிப்பிட்ட ஒரு விஷயம் நீங்கள் பகிரும் தகவல்கள் எப்பொழுதும் குறிப்பிட்ட நபருக்கு செல்ல கூடாது என நீங்கள் நினைத்தால் அந்த நபரை Restricted பிரிவில் சேர்த்து விடுங்கள்.
இனி நீங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு உங்கள் அப்டேட்ஸ் அனுப்பி மகிழலாம். இந்த வசதி முழுக்க முழுக்க கூகிள் பிளசில் இருந்து கொப்பி அடிக்கபட்டாலும் பல பேருக்கு நிச்சயம் பயனளிக்கும்.

டிஸ்கி:மேலே உள்ள என் படத்தை கிளிக் செய்தால் என்னையும் உங்கள் நண்பனாக்கி கொள்ளலாம்.


பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி SMART FRIEND LIST பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி SMART FRIEND LIST Reviewed by ANBUTHIL on 3:43 PM Rating: 5
Powered by Blogger.